Ak 61 படத்தின் தலைப்பு இதுவா.? ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்யும் படக்குழு.?

ajith
ajith

நடிகர் அஜித்குமார் வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 61 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை ஹச். வினோத் இயக்குகிறார். போனி கபூர் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரிக்கிறார் இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து  மலையாள டாப் நடிகை மஞ்சு வாரியார், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, யோகி பாபு, மகாநதி சங்கர், தெலுங்கு பட ஹீரோ அஜய், சஞ்சய் தத் உள்பட பலர் நடிப்பதாக கூறப்படுகிறது .

இந்தப் படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட இருக்கிறது இதில் அஜித் கலந்துகொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏகே 61 திரைப்படம் முழுக்க முழுக்க பேங்கை மையமாக வைத்து உருவாகுவதால் இந்த படம் ஆக்சனுக்கு பஞ்சம் இருக்காது என தெரிய வருகிறது.

இந்த படத்தின் கதையை கேட்ட உடனேயே நடிகர் அஜித்குமார் அதிரடியாக தனது உடல் எடையை குறைத்து நடிக்க ஆரம்பித்தார். மேலும் இந்த படத்தில் அஜித் இரண்டு வேடத்தில் நடிக்கிறார் ஒன்று வயதான கதாபாத்திரம் மற்றும் இளமையான கதாபாத்திரம் என கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் இருந்து ஏதேனும் அப்டேட் வந்தால் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் தினமும் சமூக வலைதள பக்கத்தில் கேட்டுக் கொண்டுதான் வந்தனர்.

இந்த நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது அதாவது இந்த படத்தில் v சம்பந்தப்பட்ட ஒரு டைட்டில் வைக்கப்பட இருப்பதாக ஏற்கனவே பேசப்பட்டது காரணம் அண்மை காலமாக இவர் நடித்த படங்கள் ஆன வீரம், விவேகம், வேதாளம், வலிமை என அனைத்தும் v சம்பந்தப்பட்ட டைட்டில் ஆகவே இருப்பதால் இந்த படத்திற்கு வல்லமை என்று பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தயாரிப்பாளர் போனி கபூரின் மனைவி ஸ்ரீதேவியின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்ய பட குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது ஆனால் இது குறித்து அதிகாரம் பூர்வமான தகவல் இன்னும் வெளிவரவில்லை இருந்தும் இச்செய்தி பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.