நடிகர் அஜித்குமார் தனது 60 வது திரைப்படமான வலிமை திரைப்படம் ஒரு வழியாக பிப்ரவரி 24 ஆம் தேதி திரையரங்கில் வெளிவந்து தற்பொழுது ரசிகர்களும், மக்களும் படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர் அந்த அளவிற்கு வலிமை படத்தில் ஆக்சன், சென்டிமெண்ட் என அனைத்தும் பொருந்தி இருப்பதால் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது.
மேலும் படக்குழு எதிர்பார்க்காத அளவிற்கு வசூல் வேட்டை நடத்தி அசத்தி உள்ளது. வலிமை படம் ஒரு வாரமே ஆன நிலையில் சுமார் 130 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மக்கள் வரவேற்பு இந்த திரைப்படத்திற்கு அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நடிகர் அஜித்குமார் தனது 61 வது திரைப்படத்தில் பணியாற்றியிருக்கிறார். அந்த படம் வேற லெவலி ல் இருப்பதால் தனது உடம்பை அதிரடியாக குறைத்து பிட்டாக மாறி உள்ளார் அதன் புகைப்படங்கள் கூட அண்மையில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது.
அஜித்தின் 61-வது திரைப்படத்தை ஹச். வினோத் இயக்க உள்ளார் போனிகபூர் மிக பிரம்மாண்ட பொருட் செலவில் படத்தை தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அஜீத் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது ராமோஜி பிலிம் சிட்டியில் மிகப் பிரம்மாண்டமாக அண்ணாசாலை செட் போடப்பட்டு வருகிறது.
இது இப்படி இருக்க மறுபக்கம் ஒரு சூப்பர் தகவலும் கிடைத்துள்ளது அதாவது இந்த திரைப்படத்திற்கும் வி சம்பந்தப்பட்ட பெயர் வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன அந்த வகையில் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து 61வது திரைப்படத்தின் பெயர் வல்லமை பெயர் வைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.