உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்கள் பெரிதும் ஆக்சன் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்துவார்கள் ஆனால் நடிகர் விக்ரம் இதிலிருந்து மாறுபட்டவர் கதை சிறப்பாக இருந்துவிட்டால் போதும் எந்த மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு ஏற்றவாறு தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு நடிப்பது.
அவருக்கு பிடித்த ஒன்று கூட வித்தியாசமான திரைப்படங்கள் பலவற்றில் அவர் நடித்து வருகிறார். அண்மையில் கூட ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வந்த கோப்ரா படத்தை வெற்றிகரமாக முடித்தார். அதை தொடர்ந்து இவரது கையில் பொன்னின் செல்வன், மகான் ஆகிய திரைப்படங்கள் போய்க்கொண்டே இருக்கின்றன.
சமீப காலமாக சியான் விக்ரமின் படங்கள் பெரிய அளவு வெற்றியை ருசிக்காத காரணத்தினால் தற்போது வெற்றியை கொடுக்க அவரும் அயராது ஓடிக்கொண்டே இருக்கிறார். சிறந்த இயக்குனர்களுடன் கதை கேட்டு வருவதால் தற்போது வருகின்ற ஏதேனும் ஒரு படங்கள் கிடைக்கும் பட்சத்தில் அந்த வெற்றியை தக்க வைத்துக் கொண்டு தொடர்ந்து சிறப்பான படங்களில் நடிக்க அவர் முடிவு செய்துள்ளாராம்.
இந்த நிலையில் விக்ரம் 61 வது திரைப்படத்தை யார் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கும் பதில் கிடைத்தது ரஜினி, ஆர்யா வைத்து ஹிட் படங்களை கொடுத்து அசத்திய இயக்குனர் பா ரஞ்சித் தான் சீயான் விக்ரமின் 61 வது திரைப்படத்தை இயக்க இருக்கிறாராம்.
இந்த படம் முழுக்க முழுக்க ஒரு வித்தியாசமான திரைப்படம் கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த கேஜிஎஃப் படத்தின் கதை போலவே இந்த படமும் தங்க சுரங்கத்தை மையமாக வைத்து இருக்கும் என தெரியவருகிறது படம் வித்தியாசமாகவும் ஃபுல் ஆக்சன் சீன்கள் அமைந்த திரைப்படமாகும் இருக்கும் என கூறப்படுகிறது.