கேங்ஸ்டராக மிரட்டும் விஜய்.? லியோ படத்தின் கதை இதுதானா..

leo
leo

Leo movie : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து விஜய் உடன் கைகோர்த்து லியோ படத்தை எடுத்துள்ளார். படத்தில் விஜய் உடன் இணைந்து மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், திரிஷா, பிக் பாஸ் ஜனனி என பெரிய திரைப்பட்டாளமே  நடித்துள்ளது.

படபிடிப்பு அனைத்தும் வெற்றிகரமாக முடிந்த நிலையில் போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்த படமும் லோகேஷுக்கு வெற்றி படம் என்று பலரும் எதிர்பார்த்து இருக்கின்றனர் இந்த நிலையில் லியோ படத்தின் கதை இதுதான் என ஒரு ஆன்லைன் ஸ்டோரி இணையதளத்தில் பரவி வருகிறது.

திரிஷாவும் விஜய்யும் படத்தில் கணவன் மனைவிகளாக நடக்கின்றனர் படத்தில் விஜய் பார்த்திபன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இருவரும் ஒரு காபி ஷாப் வைத்து நடந்து வருகின்றனர் அப்பொழுது ஒரு கும்பல் வந்து பிரச்சனை பண்ணுகிறது. அவர்களுடன் விஜய் சண்டை போடுகிறார்.

அந்த செய்தி பெரிய அளவில் வைரல் ஆகிறது இதன் மூலம் விஜயின் பழைய எதிரிகள் அவரைத் தேடி வருகின்றனர். அதன் பிறகு ஃப்ளாஷ் பேக் கதை தொடங்குகிறது. விஜய், திரிஷாவின் காம்பினேஷன் சின்னதாக இருந்தாலும் வைட்டாக இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் அதிக  காட்சிகள் சண்டைக் காட்சிகள் இருக்குமாம்..

லியோ படத்தில் பல நடிகர்கள் நடிகைகள் நடிப்பதால் படத்தை எடிட் செய்ய  ரொம்ப  படக்குழு சிரமப்பட்டு வருகிறது இருந்தாலும் அனைத்தையும் சரியாக அமைத்து படத்தை செம மாஸாக ரிலீஸ் பண்ணும் என கூறப்படுகிறது நிச்சயம் லியோ திரைப்படம் லோகேஷ்க்கு வெற்றியென பலரும் கூறி வருகின்றனர். இந்த ஒன் லைன் ஸ்டோரி கசிந்து உள்ளது லோகேஷ்க்கு வருத்தத்தை கொடுத்து இருக்கிறது