தளபதி விஜயின் ஒவ்வொரு திரைப்படங்களும் சமீபகாலமாக சூப்பர் ஹிட் அடித்ததால் அவரின் அடுத்தடுத்த படங்களை ரசிகர்கள் எதிர்நோக்கி இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது நெல்சன் டிலிப்குமர் உடன் கை கோர்த்து பீஸ்ட் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் தற்போது உச்சத்தில் இருக்கிறது.
இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் எடுத்து வருகிறது. விஜயுடன் கைகோர்த்து அபர்ணா தாஸ், பூஜா ஹெக்டே, யோகிபாபு போன்ற பல டாப் நட்சத்திர பட்டாளங்கள் நடித்து உள்ளனர்.
பீஸ்ட் படம் அடுத்த வருடமும் கோடை விடுமுறை நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் பொங்கலுக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது.
தற்போது அதில் இருந்து பின்வாங்கி இருக்கிறது. இருப்பினும் விஜய் ரசிகர்கள் வருத்தப்படாமல் அதையும் கொண்டாட ரெடியாக இருக்கின்றனர். அதற்குக் காரணம் பீஸ்ட் படத்திலிருந்து அவ்வபோது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கசிந்து கொண்டே இருப்பதால் தளபதி ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் ஒன் லைன் ஸ்டோரி ஏற்கனவே விஜயிடம் சொல்லியது தான்.
இந்த படத்தை கமிட் செய்த அந்த தகவல் தற்போது இணையதளத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. அதாவது பீஸ்ட் படத்தின் ஒன் லைன் ஸ்டோரி என்னவென்றால் பெரிதாக மக்கள் கூடும் இடமான மால்களில் தீவிரவாதிகள் உள்ளே நுழைந்து ஆக்கிரமிப்பு செய்கின்றனர். இதையறிந்த விஜய் அந்த மக்களை தீவிரவாதிகளிடம் இருந்து எப்படி காப்பாற்றுகிறார். என்பதே படமாக எடுக்கப்பட இருப்பதாக தெரியவருகிறது.
அதற்கு ஏற்றார் போலவே சூட்டிங் எடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது அண்மையில் கூட விஜய் ரத்தம் சொட்ட சொட்ட மாலில் நடந்து வந்த புகைப்படங்கள் கசிந்தது மேலும் மாலில் விஜய்யின் நடந்து சென்றது ஆகிய புகைப்படங்கள் வெளியாகி கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்படுகிறது.