பிரமாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தை தமிழ் சினிமாவில் வைத்திருக்கும் ஷங்கர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினி, விஜய், அர்ஜுன், விக்ரம், பிரசாந்த் போன்ற டாப் நடிகர்களுடன் கைகோர்த்து பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து அசத்தி ஓடிக் கொண்டிருந்த இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் அடுத்தடுத்த படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று இருந்தார்.
இப்படி இருந்தாலும் இவர் கடைசியாக அவருடன் கைகோர்த்து இந்தியன் இரண்டாம் பாகத்தை எடுத்தார் இந்த படத்தின் சூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து பிரச்சினை மேல் பிரச்சனையாக வந்தால் ஒரு கட்டத்தில் இந்தியன் 2 விவகாரம் பெரிதாக வெடித்தது எடுத்து திடீரென தெலுங்கு மற்றும் இந்திப் பக்கம் போனார் ஷங்கர்.
முதலாவதாக தெலுங்கில் டாப் நடிகர் ராம்சரணை வைத்து ஒரு புதிய படத்தை எடுத்து வருகிறார் இந்த படத்தில் ஹீரோயின்னாக கியாரா அத்வானி நடிக்கிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் ஷங்கர் இந்த திரைப்படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக இந்தியன்-2 படத்தில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது இது ஒரு பக்கம் இருக்க..
மறுபக்கம் இந்த படத்தில் இருந்து ஒரு சூப்பர் தகவல் ஒன்றும் கசிந்துள்ளது அதாவது இந்த படத்தின் ஒன் லைன் ஸ்டோரி என்னவென்றால் நடிகர் ராம்சரண் இந்த படத்தில் தேர்தல் கமிஷனர் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளதாக கூறப்படுகிறது ஒரு தேர்தல் அதிகாரி நினைத்தால் என்னென்ன மாற்றங்களை செய்ய முடியும் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகி வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன.
இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் அடுத்ததாக கமெண்ட்டுகளையும் கொடுத்துள்ளனர் இந்த படத்தின் கதையை பல வருடங்களுக்கு முன்பு நடிகர் விஜயகாந்த் தென்னரசு படத்தில் நடித்துக் காண்பித்து விட்டார் அந்த படத்தில் நடிகர் விஜயகாந்த் ஒரு தேர்தல் கமிஷனராக நடித்திருப்பார் படத்தின் இறுதியில் யாருக்கு ஓட்டு போடவேண்டும் போடக்கூடாது போன்ற காட்சிகள் இடம்பெற்று வரும்.
இந்த படமும் விறுவிறுப்பாக இருந்துள்ளது அதேபோல் தற்போது பிரமாண்ட இயக்குனர் ஷங்கரும் இதுபோன்ற ஒரு கதையையே எடுத்திருந்தாலும் சில மாற்றங்களை செய்து இந்த காலத்திற்கு ஏற்றவாறு சிறப்பாக எடுத்து இருப்பார் என ரசிகர்கள் நம்பி இந்த படத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கின்றனர்.