ஜெயிலர் படத்தின் கதை இதுதானா.? வெளியான புதிய தகவல்…

Jailer
Jailer

தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் ரஜினி இவரை பலரும் சூப்பர் ஸ்டார் என்றும் அழைத்து வருகிறார்கள். ரஜினி அவர்கள் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது.

மேலும் ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் ரஜினி ஒரு ஜெயில் வார்டனாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களாக இவருடைய படம் சரியாக ஓடவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ஆனால் இந்த திரைப்படம் வெளியானதும் இதை கடுமையாகவும் விமர்ச்சித்தனர்.

இந்த நிலையில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனால் நடிகர் ரஜினியை வைத்து ஜெயிலர் படத்தை எப்படி கொடுக்க போகிறார் என்ற பதட்டம் எல்லோருக்கும் இருக்கிறது இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து ஜெயிலர் படத்தின் கதை குறித்து ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது அதாவது ஜெயிலர் படத்தின் கதை எப்படி இருக்கும் என்று தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது அதாவது கதைப்படி ரஜினி ஜெயலராக இருக்கிறார் அந்த ஜெயிலில் இருந்து கைதிகள் தப்பிக்க முயற்சி செய்கிறார்கள் அதை ரஜினி அவர்கள் தடுத்து நிறுத்துகிறார்.

இதனால் வில்லனுக்கும் ரஜினிக்கும் மோதல் வெடிக்கிறது அதன் பிறகு நடக்கப் போதுதான் ஜெயிலர் படத்தின் கதையாக இருக்கும் என கூறப்படுகிறது இந்த தகவல் தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது அது மட்டும் இல்லாமல்  ஜெயிலர் படத்திற்கான எதிர்பார்ப்பை பல மடங்கு எகிற வைத்துள்ளது.