தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தன்னை மிகப் பெரிய அளவில் வளர்த்து கொண்டவர் இயக்குனர் ஹச். வினோத். இவர் முதலில் சதுரங்க வேட்டை என்னும் படத்தை எடுத்து அறிமுகமானார் முதல் படமே இவருக்கு பிளாக்பஸ்டர் படமாக அமைந்ததால் அடுத்தடுத்து படம் பண்ணும் வாய்ப்பு கிடைத்தது.
அதையும் சரியான முறையில் கையாண்டு வெற்றி படங்களை கொடுத்தார் அந்த வகையில் தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் இவர் கடைசியாக எடுத்த துணிவு திரைப்படம் என அனைத்துமே வெற்றி படங்கள் தான். குறிப்பாக துணிவு திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றதோடு மட்டுமல்லாமல் அதிக நாட்கள் ஓடியில் அதிக வசூலை திரைப்படமாக இருக்கிறது.
இந்த வெற்றியால் சந்தோஷம் அடைந்துள்ள ஹச். வினோத் அடுத்து ஒரு வெற்றி படத்தை கொடுக்க தற்பொழுது ரெடியாகி உள்ளார். நடிகர் கமலை சந்தித்து ஒரு கதையை கூறி இருக்கிறார் மறுபக்கம் நடிகர் தனுஷிடமும் ஒரு கதையை கூறி இருக்கிறார். முதலில் யார் ஓகே சொல்வார்களோ அவரை வைத்து படம் பண்ண உள்ளார் என கூறப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் ஹச். வினோத் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. சதுரங்க வேட்டை போன்று ஒரு படத்தை மீண்டும் உங்களிடம் எதிர்பார்க்கலாமா என கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கு பதில் அளித்த இயக்குனர் வினோத்..
தனுஷுக்கு அதுபோன்ற ஒரு கதையைத்தான் சொல்லி இருக்கிறேன் என கூறியுள்ளார். வெகு விரைவிலேயே அதற்கான அறிவிப்பும் வரும் என கூறியிருக்கிறார். இதை கேட்ட பலரும் அப்படி என்றால் சதுரங்க வேட்டை படத்தின் இரண்டாவது பாகமாக என கேள்வி எழுப்பி வருகின்றனர் இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.