தமிழ் சினிமா உலகில் நடிப்பிற்கு பெயர் போனவர்கள் என்றார் ஆம் சிவாஜி, கமல், விக்ரம் போன்ற நடிகரின் பெயர்களை தான் சொல்கிறோம் ஆனால் கமலை விட சிறப்பாக நடிக்க கூடியவர் ரகுவரன் இவருக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து படங்களில் நடித்துள்ளார்.
இவர் முதலில் மலையாளத்தில் வெளியான காக்கா என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பின் தமிழில் தனது திறமையை காட்டி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடினார் குறிப்பாக இவர் தமிழில் ஹீரோ வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் போன்ற கதாபாத்திரங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு கட்டத்தில் இவர் படங்களில் வில்லனாக நடித்து பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். அதிலும் குறிப்பாக இவர் நடித்த ஒரு சில படங்கள் இப்பொழுதும் கூட ரசிகர்களுக்கு ஃபேவரட் படங்களாக இருக்கின்றன. அந்த வகையில் பாட்ஷா, முதல்வன், ரட்சகன், அமர்க்களம், முத்து, காதலன், ஊர்க்காவலன் நான் சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு பல படங்களில் ரகுவரன் நடித்துள்ளார்.
சினிமா உலகில் வெற்றியை ருசித்தாலும் நிஜ வாழ்க்கையில் ரொம்பவும் கஷ்டப்பட்டு உள்ளார். இவர் 1996 ஆம் ஆண்டு ரோகினியை திருமணம் செய்து கொண்டார் பின் 2004 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர் இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் இருக்கிறார் அவரது பெயர் சாய் ரிஷிவரன்.
ரகுவரனை போலவே அவரது மகனும் ஆள் பார்ப்பதற்கு செம்ம அழகாக இருக்கிறார். தொடர்ந்து பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் கால் தடம் பதிகின்றனர். அந்த வகையில் ரகுவரன் மகனும் சினிமா உலகில் வருவதற்கான அனைத்து தகுதிகளும் இருப்பதாக புகை படத்தை பார்த்த ரசிகர்கள் சொல்லி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் நடிகை ரோகினி உடன் அவரது மகன் இருக்கும் அந்த அழகிய புகைப்படத்தை..