முந்தானை முடிச்சு திரைப்படத்தில் நடித்த ஆண் குழந்தை விஜய் டிவியில் நடித்த இந்த சீரியல் நடிகையா.!

munthanai-mutichi-movie
munthanai-mutichi-movie

பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் பாக்யராஜ். இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

அந்த வகையில் இவர் இயக்கத்தில் 1983ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் முந்தானை முடிச்சு. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அந்தவகையில் இந்த  படத்தில் முன்னணி நடிகரான பாக்கியராஜ் இதற்கு ஜோடியாக ஊர்வசி மற்றும் தீபா,கேகே.சௌந்தர் உட்பட இன்னும் பல பிரபலங்கள் நடித்து இருந்தார்கள்.

இப்படத்தின் மூலம் தான் ஊர்வசி கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதுதான் அவரின் முதல் படம் என்றாலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.இப்படம் அப்பொழுதே நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.எனவே விமர்சன ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

sujitha 2
sujitha 2

தமிழில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் ஹிந்தி,கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தில் பாக்யராஜ் மனைவியை இழந்திருப்பார். ஒரு குழந்தையை மட்டும் வைத்து வாழ்ந்து வருபவர்.  அந்த குழந்தை வேறுயாருமில்லை தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் தனம் என்ற கேரக்டரில் நடித்து வரும் சுஜாதாதான். நடிகை சுஜிதா கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.இவர் 1983 ஜூலை 12ஆம் தேதி பிறந்தார்.