அஜித்தின் சம்பள உயர்வுக்கு பின்னால் இருக்கும் ரகசியம் இதுதான்.? விஷயத்தை லீக் செய்த பத்திரிகையாளர்.!

ajith
ajith

தமிழ் சினிமா உலகில் ஒவ்வொரு ஹீரோவும் தனது படம் ஹிட் அடிக்கும் போது தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி வருகின்றனர் அதுவும் குறிப்பாக தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் ஹீரோக்கள் ஒரு படம் வெற்றி அடைந்த பிறகு கணிசமாக சுமார் பத்து கோடிக்கு மேல் உயர்த்துகின்றனர்.

அந்த வகையில் சிவகார்த்திகேயன் தனுஷ் ஆகியவர்கள் தொடங்கி ரஜினி அஜித் விஜய் பலரும் தனது சம்பளத்தை உயர்த்தி வருகின்றனர் அதிலும் குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடிக்க உள்ள தனது 169வது திரைப்படத்திற்காக சுமார் 150 கோடி சம்பளம் வாங்குகிறார்.

அவரை தொடர்ந்து அதிகமாக சம்பளம் வாங்கும் லிஸ்டில்  விஜய் 118 கோடி, அஜித் 105 கோடி போன்றவர்கள் இருக்கின்றனர். குறிப்பாக தளபதி விஜய் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுப்பதால் அவரது சம்பளம் உயருகிறது சரி ஏன் அஜித்திற்கு 105 கோடி என பலரும் கேள்வி கேட்கின்றனர் காரணம் அஜித்தின் திரைப்படங்கள் வெற்றி படங்களாக இருந்தாலும்..

சமீபகாலமாக அந்த படங்கள் பெரிய அளவுக்கு வசூல் வேட்டை நடத்தியதா என்றால் அது கேள்வி கூறிதான் அது அஜித்துக்கே தெரியும் தனது படங்கள் மிகப்பெரிய வசூலை ஈட்ட வில்லை என்று அப்படி இருக்கையில் ஏன் 105 கோடி சம்பளம் கேட்கிறார் என பத்திரிக்கையாளரான பிஸ்மி இடம் கேள்வி கேட்டுள்ளார் அதற்கு அவர் கூறியுள்ளது.

விஜய்க்கு சரியான போட்டிக்காளர் அஜித் தான். விஜய் தற்பொழுது ஒரு படத்திற்கு 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். அஜித்தும் 100 கோடிக்கு மேல் உயர்த்தி உள்ளார். இவர்களைப் போலவே தான் தற்போது சிவகார்த்திகேயனும், தனுஷூம் மாறி மாறி போட்டி போட்டுக் கொண்டு தனது சம்பளத்தை உயர்த்தி வருகின்றனர். இதனை பிஸ்மி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.