தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் பல திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் இவருடைய நடிப்பில் கடைசியாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்த நிலையில் இவர்களை அடுத்து சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ்ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
குடும்ப பின்னணியை மையமாக உருவாகியிருந்த இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தில் குஷ்பு நடித்திருப்பதாக தகவல் வெளியானது மேலும் பட குழுவினர்களும் குஷ்பூ, ராஸ்மிகா, விஜயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருந்தனர்.
ஆனால் வாரிசு படத்தை பார்க்கும் பொழுது தான் அவர் ஒரு காட்சியில் கூட இடம்பெறவில்லை என்பது தெரிய வந்தது. இதற்கு முன்பு பேட்டி ஒன்றில் குஷ்பூ விடம் வாரிசு படத்தை பற்றி ஏன் என்னிடம் கேட்கிறீர்கள் அந்த படத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை சரத்குமார் மற்றும் பிரபு ஆகியவர்களை பார்ப்பதற்காக தான் வாரிசு படத்திற்கு பக்கத்தில் என்னுடைய படப்பிடிப்பு நடந்தது அதனால் தான் நான் அங்கு சென்றேன் எனக் கூறினார்.
அதன் பிறகு புகைப்படத்தின் மூலம் குஷ்பூ அந்த படத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் உறுதியான நிலையில் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் வாரிசு படத்தின் எடிட்டிங் பணியை மேற்கொண்ட பிரவின் கே எல் குஷ்பு ஏன் நடிக்கவில்லை என்பதை பற்றி தெரிவித்தார். அவர் கூறுகையில், இதனை கேட்பதற்கு எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது குஷ்பு மிகவும் அருமையாக நடித்திருந்தார்.
அதோட அவருடைய கதாபாத்திரமும் நன்றாக இருந்தது ஆனால் படத்தின் நீளம் கருதி குஷ்பூ பட காட்சிகளை நீக்க வேண்டிய கட்டாயத்தால் அவர் நடித்திருந்த காட்சிகளை நீக்கினோம் எனவே குஷ்புவிடம் நான் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்கிறேன் என தெரிவித்தார். வாரிசு படத்தில் மொத்தம் குஷ்பூ 17 நிமிடங்கள் நடித்ததாக கூறப்பட்ட நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக 40 லட்சம் குஷ்புவிற்கு சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்.