நடிகர் கமலஹாசன் சமீப காலமாக சினிமாவில் நடிக்காமல் அதற்கு மாறாக அரசியல் பிரவேசம் கண்டார். அதன் முலம் தற்போது ஓரளவு மக்களை கவர்ந்து இழுத்து உள்ளார். இப்படி இருக்க இவர் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் வந்து உள்ளது அந்த வகையில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்க முனைப்பு காட்டினார்.
ஆனால் அது பல தடைகளைச் சந்தித்து அதை ஓரம் வைத்துவிட்டு மாஸ்டர் படத்தை இயக்கி வெற்றி என்றால் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து “விக்ரம்” என்ற திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார்.
கமலுக்கு எப்பொழுதும் ஒரு படம் மிகப்பெரிய ஹிட் அடிக்க வேண்டும் என்றால் இவரது நடிப்பிற்கு ஏற்றவாறு அபாரமான நடிப்பை வில்லன் ரோலில் மிரட்டினால் மட்டுமே அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் அப்படித்தான் கமலின் திரைப்படங்கள் இருந்துள்ளன.
அதுபோல இந்த படத்தில் அவருக்கு வில்லனாக முதலில் பிரபுதேவா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது வெறும் வதந்தி களாகவே போன இதனையடுத்து அவர் மாஸ்டர் திரைப்படத்தில் பவனியாக மிரட்டிய விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அவருக்கு முன்பாகவே பகத் பாசில் இந்த திரைப்படத்தில் வில்லனாக கமிட்டாகி அதை அவர் உறுதி செய்தார்.
பகத் பாசில் இதுவரை நடித்த எந்த ஒரு திரைப்படமும் தோல்வியை சந்திக்காமல் இருக்கின்றன அதற்குக் காரணம் அவர் தேர்ந்தெடுக்கும் கதையும் தன்னால் முடியாது இல்லவே இல்லை என்றும் அவர் நம்புவதுதான் காரணம் என கூறப்படுகிறது. அதுபோலவேதான் விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்க தயங்காமல் அந்த ரோலை ஏற்று சிறப்பாக நடிக்க உள்ளார்.
இந்த நிலையில் இப்படத்தில் எந்த மாதிரியான ரோலில் நடிக்கிறார் என்ற செய்தி தற்போது இணையதளத்தில் வெளியாகி வருகிறது அதாவது பகத் பாஸில் விக்ரம் படத்தில் சிறைச்சாலையில் காவல் அதிகாரியாக இருந்துகொண்டு குற்றவாளிகளை தப்பிக்க விடும் அதிகாரியாக நடிப்பதாக ஒரு பக்கம் கூறுகின்றனர்.
மறுபக்கம் இவர் ஒரு அரசியல்வாதியாக பின்னி பெடல் எடுத்து உள்ளார் என்றும் கூறுகின்றனர் ஆனால் இது இதுவரையிலும் வதந்தி என செய்தியாகவே இருக்கின்றன. இருப்பினும் இணையதள பக்கத்தில் இந்த செய்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது.