நம்ம அகராதில பின்வாங்குற பழக்கமே கிடையாது.. வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி இதுவா.?

vijay
vijay

தளபதி விஜய்க்கு தமிழ் நாட்டை தாண்டி கேரளா, தெலுங்கு, கர்நாடகா என அனைத்து இடங்களிலும் நல்ல மார்க்கெட் இருக்கிறது. அங்கு தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க தற்பொழுது படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். அந்த வகையில் முதலாவதாக தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் கைகோர்த்து தனது 66-வது திரைப்படமான வாரிசு.

திரைப்படத்தில் விஜய் நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் சூப்பராக உருவாகியுள்ளது படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இவர்களுடன் கைகோர்த்து ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த்.. மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப செண்டிமெண்ட் கதையாக உருவாகி இருந்தாலும்.. இந்த படத்தில் காமெடி, ஆக்சன் போன்றவை பெரிய அளவில் இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் விஜய் மிகப்பெரிய ஒரு பணக்காரராகவும் நடித்திருக்கிறாராம்.. விஜயின் வாரிசு திரைப்படத்தை எதிர்த்து அஜித்தின் துணிவு திரைப்படம் கோலாகலமாக பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. இதனால் இரண்டு திரைப்படங்களும் தற்போது திரையரங்குகளை கைப்பாற்ற அதிகம் ஆர்வம் காட்டி வருகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் படங்கள் எந்த தேதியில் ரிலீஸ் ஆகும் என்பதை உறுதிப்படுத்தாமல் இருக்கிறது படக்குழு இந்த சமயத்தில் ஒரு தகவல் கிடைத்திருக்கிறது அதாவது விஜயின் வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி 12 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் மத்தியில் தகவல்கள் கசிந்துள்ளன துணிவு திரைப்படம் 11 அல்லது 13 ஆகிய தேதிகளில் வெளியாகும் என தகவல்கள் கசிந்து இருக்கின்றன.