“பீஸ்ட்” படத்தின் ரீலிஸ் தேதி இதுவா.? வெளியான புகைப்படத்தை பார்த்து கன்பார்ம் செய்யும் ரசிகர்கள்.

தளபதி விஜயின் சமீபகாலமாக படங்கள் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் அதுபோல தற்போது இவர் நடித்துவரும் பீஸ்ட் திரைப்படமும் மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டை படமாக இருக்கும் என கூறப்படுகிறது அதற்கு காரணம் இவர் தேர்ந்தெடுத்த இயக்குனர் என தெரியவருகிறது.

ஏனென்றால் நெல்சன் திலிப்குமார் இயக்கிய ஒவ்வொரு திரைப்படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல  வரவேற்பை பெற்றுள்ளதால் பீஸ்ட் திரைப்படமும் நிச்சயம் நல்லதொரு வெற்றியை பெரும் என்பது ரசிகர்களின் கணிப்பாக இருக்கிறது.

பீஸ்ட் படத்தின் சூட்டிங் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது இந்த படத்தில் இருந்து அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கசிந்த வண்ணமே இருக்கின்றன மேலும் இந்த படத்தில் தளபதி விஜய் பிரமாண்ட மாலில் ரத்தம் சொட்ட சொட்ட வரும்  புகைப்படம் படபிடிப்பு தளத்தில் இருந்து கசிந்தது.

அது இணையத்தில் தீயாய் பரவி வந்த நிலையில் தற்போது அடுத்த அடுத்த அப்டேட் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. அவ்வகையில் இந்த படம் சூட்டிங் தொடங்கப்பட்டு தற்போது வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது பீஸ்ட் படத்திலிருந்து ஒரு ஐடி கார்டு வெளியாகியுள்ளது.

அதில் 2022 மே மாசம் என மென்ஷன் பண்ண பட்டு உள்ளது அப்படி பார்த்தால் இந்த திரைப்படம் நிச்சயம் பொங்கல் ரேஸில் கலந்து கொள்ளாமல் சம்மரில் தான் வெளிவந்து ரசிகர்களை கவரும் என கூறப்படுகிறது. இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் அந்த கார்ட்டில் குறிப்பிடப்பட்டது இதுதான். இதோ நீங்களே பாருங்கள்.

beast
beast