நடிகர் அஜித் குமார் தனது 61 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படத்தில் அவருடன் சேர்ந்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, இளம் நடிகர் வீரா என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது இந்த படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தை முழுக்க முழுக்க ஒரு வித்தியாசமான கதை களத்தில் ஹச். வினோத் இயக்கி வருகிறார்.
இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரி சம்பந்தமாக படமாக உருவாகுவதால் நடிகர் அஜித் இந்த படத்திற்காக சுமார் 20 கிலோ உடல் எடையை குறைத்து நடிக்கிறார் என கூறப்படுகிறது ஆள் பார்ப்பதற்கு இப்போ செம்ம சூப்பராக இருக்கிறார் அதன் புகைப்படங்கள் வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது.
முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது அத்துடன் படப்பிடிப்பு நிறைவு பெறும் என தெரிய வருகிறது இதற்கிடையில் தற்போது தனது BMW பைக்கை எடுத்துக் கொண்டு வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
வெகுவிரைவிலேயே அடுத்த கட்ட ஷூட்டிங் தொடங்கப்பட இருக்கிறது அதில் அஜித் மற்றும் மஞ்சுவாரியார் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறதாம். அதை முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை பார்ப்போம் என கூறப்படுகிறது ஆனால் தீபாவளி படம் வருவது சற்று சிக்கல் தான் எனக் கூறப்படுகிறது
தீபாவளிக்கு வர உள்ள திரைப்படங்கள் ஏற்கனவே அறிவித்து விட்டது அஜித்தின் AK 61 தற்போது வரை கூறாமல் இருப்பதால் தீபாவளிக்கு வராது என அடித்துக் கூறப்படுகிறது மேலும் அஜித்தின் AK 61 திரைப்படம் டிம்பர் மாசம் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், ஜெயம் ரவியின் இறைவன், கார்த்திகேயன் சர்தார் ஆகிய திரைப்படங்கள் மோதும் என கூறப்படுகிறது.