Vijay :90 களில் கொடி கட்டி பறந்தவர் நடிகை மீனா. இவர் 14 வயது இருக்கும் பொழுது என் ராசாவின் மனசிலே படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமானார் அதன் பிறகு டாப் நடிகர்களான ரஜினி, கமல், அஜித், சத்யராஜ், பிரபு போன்ற டாப் நடிகர்களின் படங்கள் நடித்து தன்னுடைய மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்ந்து கொண்டார்.
திரையில் வெற்றி நடிகையாக ஓடிய மீனா இதுவரை மட்டும் நடிகர் விஜய் மட்டும் உடன் இணைந்து படம் பண்ணவே இல்லை.. அதற்கான காரணத்தையும் மீனா தொடர்ந்து பேட்டிகளில் சொல்லி வருகிறார். விஜயின் பிரியமுடன், பிரண்ட்ஷிப் போன்ற படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது உண்மை தான்.
ஆனால் அந்த சமயத்தில் பல படங்களில் பிஸியாக இருந்ததால் விஜயுடன் நடிக்க முடியாமல் போனதாக கூறினார் ஆனால் அதற்கான உண்மையான காரணத்தை செய்யாறு பாலு பேட்டியில் கூறியுள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்..
இப்பொழுது இருக்கிறதை விட அந்த காலத்தில் அதாவது 90களில் இறுதியில் மற்றும் 2000 ஆண்டில் விஜய் பார்ப்பதற்கு மிகவும் இளமையான தோற்றத்துடன் இருந்தாராம் ஆனால் மீனா பார்ப்பதற்கு ஒரு வயது அதிகமானதை போல் இருந்தாராம் அதனால் இவர்கள் இருவரின் ஜோடி ரசிகர்கள் ஏற்பாரா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது.
அதனால் கூட விஜய்யுடன் இணையும் வாய்ப்பு மீனாவிற்கு ஏற்படவில்லை என கூறினார் அதேசமயம் ரஜினியின் ரசிகையான மீனா எந்த அளவிற்கு இருந்தாரோ அதே மாதிரி விஜய்யையும் மீனாவிற்கு பிடிக்கும் என கூறினார் இந்த தகவல் சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.