இயக்குனர் பாலா : மனைவியை விவாகரத்து பெற்று பிரிவதற்கான காரணம் இது தானாம்.?

bala
bala

தமிழ் சினிமா உலகில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தன்னை பிரபலப்படுத்தி கொண்டவர் இயக்குனர் பாலா இவர் இதுவரை சிறந்த நடிகர்களை வைத்து மட்டுமே படங்களை இயக்கி வெற்றி கண்டு உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படங்களும் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து உள்ளது.

சினிமாவுலகில் இயக்குனராக மட்டும் பணி புரியாமல் தற்போது சிறந்த படங்களையும் தயாரித்து வருகிறார். இதனால் அவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. இப்படி ஓடிக் கொண்டிருக்க நிஜ வாழ்க்கையில் தற்போது சர்ச்சைக்கான விஷயம் ஆரம்பித்து உள்ளார்.

இயக்குனர் பாலா இவர் 2004 ஆம் ஆண்டு முத்து மலர் என்பவரை திருமணம் செய்துகொண்டார் இவர்கள் இருவருக்கும் பிராதானா என்ற குழந்தை உள்ளது. இருவரும் வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக இருவருக்கும் இடையே மனதளவில் ஒன்று சேர்ந்து வாழவில்லை.

இப்படி இருந்த நிலையில் நேற்று திடீரென பாலா மற்றும் முத்து மலர் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.இதையடுத்து இச்செய்தி தீவிரமாக பரவியது இந்த நிலையில் கோடம்பாக்கத்தில் இவர்கள் குறித்து விசாரித்த போதுதான் அடுத்தடுத்த தகவல்கள் வெளிவருகின்றன.

அதில் அவர்கள் சொன்னது பாலா பிரிவு ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அவர்கள் கடந்த நான்கு வருடங்களாக பிரச்சனையில் தான் சிக்கி தவித்து வருகின்றனர். பிரச்சனையை சரி செய்யாமல் வாழ்ந்து வருவதை விட அதற்கு பிரிந்து விடலாம் என்பது மேல் என்பது போல கூறி இருவரும் விவாகரத்து பெற்று தற்போது பிரிந்துள்ளனர்.