நடிகர் விஜய் : இசையைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு வாய்ப்பு கொடுக்காமல் போனதற்கு காரணம் இதுவா.? பின் தனது ரூட்டை மாற்றிய இளையராஜா மகன்.

yuvan-and-vijay
yuvan-and-vijay

சினிமா உலகில் ஒரு படம் வெற்றி அடைய நடிகர், நடிகைகள் எவ்வளவு முக்கியமோ அதுபோல அவர்கள் காட்சிகள் சிறப்பாக கொடுக்க இசை மிக முக்கியம். பாடல்களையும் தாண்டி பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைகிறது இதனால் இசையமைப்பாளர் ஒரு படத்திற்கு மிக முக்கியம்.

அந்த வகையில் 90 காலகட்டங்களில் இருந்து தற்போது வரையிலும் இசையமைத்து வரும் இளையராஜா. இவரது மகன்களும் இசையில் பின்னி பெடல் எடுகின்றனர். அதிலும் குறிப்பாக யுவன்ராஜா அப்பாவைப் போல இசையில் செம்ம மாஸ் காட்டி வருகிறார். இளம் வயதிலேயே டாப் நடிகர் படத்துக்கு இசை அமைத்து அறிமுகமானார்.

அதன்பின் டாப் நடிகர்களான அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து தனது திறமையை வெளிக்காட்டினார் தற்பொழுது பெரிதும் அஜித் படங்களுக்கு தான் அவர் இசையமைத்து வருகிறார் மேலும் அஜித்தின் தீவிர ரசிகரும் கூட இவர் பில்லா, மங்காத்தா, நேர்கொண்ட பார்வை போன்ற பல்வேறு படங்களுக்கு இசையமைத்துவர்.

தற்போது கூட வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள “வலிமை” படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா தான் இசை அமைத்துள்ளார் ஆனால் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜயுடன் மட்டும் இவர் பெருமளவு படங்களில் இசை அமைக்காமல் இருந்து வருகிறார். யுவன் சங்கர் ராஜாவும், விஜயும் ஒரே ஒருமுறை மட்டும் தான் இணைந்துள்ளனர் ஆம் 2003 விஜயுடன் புதியகீதை திரை படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் யுவன் சங்கர்ராஜா இசை அமைத்தார்.

அதன் பிறகு நடிகர் விஜய் வைத்து இசையமைக்கவில்லை மேலும் விஜய் தொடர்ந்து ஆக்சன் திரைப்படங்களில் நடித்து வந்ததால் அவர் மணிஷர்மா, வித்தியாசாகர், கோபிநாத் போன்றவர்கள் இசையைப்பாளர்களை பெரிதும் பயன்படுத்தியுள்ளார் இப்பொழுது கூட இவர் அனிருத், ரகுமானை பெரிதும் விரும்புவதால் இனிவரும் காலங்களில் இவர்கள் இணைவது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது ஆனால் யுவன் சங்கர் ராஜா வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் விஜயுடன் பணியாற்றவேன் என கூறியுள்ளார்.