“பீஸ்ட்” படத்தின் அப்டேட் வெளியிட முடியாமல் போவதற்கு காரணம் இதுதானாம்.? பேட்டி ஒன்றில் உண்மையை சொன்ன இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.

nelson-dilipkumar
nelson-dilipkumar

தமிழ் சினிமாவில் இருக்கும் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் நெல்சன் டிலிப்குமர் ஏனென்றால் இவர் இயக்கிய கோலமாவு கோகிலா படம் ஒரு முக்கிய பிரபலம் இல்லாமல் காமெடியாகவும் அதே சமயம் ஒரு நல்ல கருத்தையும் எடுத்துரைக்கும் பலமாக அமைந்திருந்தது.

இந்த படம் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது இந்த திரைப்படத்தில் யோகி பாபு நயன்தாரா ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளி வாங்கியிருந்தார் திலிப்குமார். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் “டாக்டர்” திரைப்படத்தை சீக்கிரமாக எடுத்தார்.

அண்மையில் கூட இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு தளபதி விஜய் உடன் முதன் முறையாக கூட்டணி அமைத்து “பீஸ்ட்” என்ற திரைப்படத்தை விறுவிறுப்பாக எடுத்து வருகிறார். படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங்கிற்காக படக்குழு ரஷ்யா செல்ல இருக்கிறது.

இந்த நிலையில் தெலுங்கு பத்திரிகையாளர் சந்திப்பின் போது அவர் சில விஷயங்களை பகிர்ந்தார். நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் வருகின்ற 9 – ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. அப்போது பீஸ்ட் படத்தின் அப்டேட் எப்பொழுது கொடுப்பீர்கள் என கேட்டனர்.

அதற்கு இயக்குனர் நெல்சன் திலீப்குமார் நாங்கள் ரெடியாக தான் இருக்கிறோம். ஆனால் அதற்கு முன்பாக டாக்டர் திரைப்படம் முதலில் வெளி வரட்டும் அதன் பின்னர் நாங்கள் பீஸ்ட் படத்தின் அப்டேட் ஒவ்வொன்றாக கொடுப்போம் என கூறினார். இச்செய்தி தற்போது தளபதி விஜய் ரசிகர்களை துள்ளல் ஆட்டம் போட வைத்துள்ளது.