Aniruth : தமிழ் சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத ஒரு இசையமைப்பாளர் அனிருத். இவர் தனுஷின் 3 படத்திற்கு இசையமைத்து அறிமுகமானார் முதல் படத்திலேயே இவருடைய இசை பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது அதன் பிறகு அஜித், விஜய், ரஜினி, கமல் என அடுத்தடுத்த டாப் ஹீரோகளுக்கு இசையமைத்து தன்னுடைய மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்திக்கொண்டார்.
இப்படி தமிழ் சினிமாவில் ஓடிக் கொண்டிருந்த அனிருத் திடீரென பாலிவுட் பக்கத்திலும் தலைக்காட்டி உள்ளார் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் படத்திற்கு இவர் தான் இசையமைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி ஓடிக்கொண்டே இவர் ஒரு படத்திற்கு தற்பொழுது சுமார் 5 கோடியிலிருந்து 7 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
என்னதான் திரை உலகில் ஹிட் கொடுத்து இருந்தாலும் இவரும் சர்ச்சைகளில் சிக்கி உள்ளார் ஆம் இவர் ஆரம்பத்தில் நடிகை ஆண்ட்ரியாவை காதலித்த பொழுது இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்தால் புகைப்படங்கள் அப்பொழுது வெளியாகின. ஒரு கட்டத்தில் நாங்கள் இருவரும் காதலித்து உண்மைதான் என இருவருமே ஒத்துக் கொண்டனர்.
இந்த நிலையில் இவர்கள் காதல் முறிந்தது குறித்து பிரபலம் ஒருவர் வெளிப்படையாக பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. அனிருத் சில வருடங்களுக்கு முன் நடிகை ஆண்ட்ரியா உடன் நெருக்கமாக இருந்த சில புகைப்படங்கள் இணையதளத்தில் வெளிவந்து சர்ச்சையாகியது. அனிருத் சினிமாவிற்கு வந்த போது அவருக்கு வயது பெறும் 19 தான் அந்த சமயத்தில் ஆண்ட்ரியாவுக்கு வயது 25. வயதை வித்தியாசமே அவர்களின் காதல் முறிக்க முக்கிய காரணமாக அமைந்தது.
அந்த புகைப்படங்கள் வெளியான சமயத்தில் அனிருத்தின் குடும்பத்தினர் வயது அதிகம் உள்ள பெண்ணை திருமணம் செய்வதா என்று அனிருத்தின் காதலுக்கு பெரிய முட்டுக்கட்டையாக இருந்துள்ளனர் இந்த நேரம் இந்த காதல் எல்லாம் மூன்று வருடங்கள் கூட தாங்காது என்று அனிருத்தின் தந்தை அப்பொழுது எச்சரித்தாராம் மேலும் ஆண்ட்ரியா பற்றி பல வதந்திகளும் வெளியானது. அனிருத் – ஆண்ட்ரியா இடையான கருத்து வேறுபாடுகள் முக்கிய காரணமாக அமைந்து இருவரும் பிரிந்து விட்டனர்.