சரியான பிளானில் காய் நகர்த்தும் நடிகர் வடிவேலு..! உதயநிதியுடன் கூட்டணிக்கு இதுதான் காரணமா..!

vadivelu-2
vadivelu-2

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் வடிவேலு இவர் தற்சமயம் நாய் சேகர் என்ற திரைப்படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்தில் இவர்களுக்கு நிகராக ஒரு காமெடி நடிகர் ஒருவர் என்றால் அது வடிவேலு தான்.

பொதுவாக வடிவேலு கிண்டல் கேலி போன்ற செயல் மூலமாக காமெடி செய்வதை விட உடல் அசைவின் மூலமாக காமெடி செய்வதில் வல்லவர்.  அந்த வகையில் இவருடைய காமெடி காட்சிகள் பலவற்றை நாம் பார்த்து இருப்பது மட்டுமில்லாமல் அவை இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த ஒரு திரைப்படங்களும் நடிக்காமல் இருந்த வடிவேலு சமீபத்தில் வரிசையாக பல பட வாய்ப்புகளை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் நடிகர் வடிவேலு சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் திரை படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்த நிலையில் அதை நிராகரித்து விட்டாராம்.

அது வேறு எந்த திரைப்படமும் கிடையாது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் சிங்கம் பாதை என்ற திரைப்படத்தில் தான் வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் நடிகர் வடிவேலு நான் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என கூறியது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஆனால் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள திரைப்படம் ஒன்றில் இவர் காமெடி நடிகராக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் மட்டும் ஏன் அவர் நடிக்க ஒப்புக் கொண்டார் என்ற செய்தி ரசிகர்களிடையே மிகுந்து உள்ளது.

இந்நிலையில் வடிவேலு ஏன் இப்படி செய்தார் என்றால் உதயநிதி படத்தில் நடித்தால் தமக்கு சினிமா உலகில் எந்த ஒரு பிரச்சனையும் வரவே வராது ஆகிய ஒரே காரணத்தினால் தான் இந்த திரைப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக திரையுலக வட்டாரம் கூறிவருகிறது.