ஃபேமிலி மேன் 2 சீரிஸ் நடிக்க காரணமே இதுதான்.? நான் ஒன்னும் போன உடனே நடிக்கலை.? இதை பார்த்து அறிந்த பிறகு நடித்தேன் – சமந்தா அதிரடி.?

family-man-2
family-man-2

தென்னிந்திய திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் சமந்தா தற்போது வெப்சீரிஸ் பக்கம் தலை காட்டி நடித்து வருகிறார் அந்த வகையில் ஃபேமிலி மேன் 2 சீரிஸ் நடித்து உள்ளார்.

இதன் டிரைலர் வெளியாகி பலரையும் விமர்சினத்துக்கு உள்ளாகியது காரணம் இந்த சீரிஸ் ஈழத்தமிழர்களை கொச்சைப்படுத்தும் விதமாக அமைந்ததாக பல அரசியல்வாதிகள் மற்றும் மக்களும் சாடினர். ஆனால் இதற்கு படக்குழு எந்த ஒரு பதிலையும் அளிக்காமல் படத்தை இரவோடு இரவாக ரிலீஸ் செய்தது.

தற்பொழுது ஃபேமிலி மேன் 2  சீரிஸ் வெளிவந்து வெற்றிநடை கண்டு வருகிறது இதில் சமந்தாவின் நடிப்பு வேற லெவலில் இருந்து வருவதோடு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர் இந்த நிலையில் இந்த படத்தில் ஏன் நடித்தேன் என்பது குறித்து அவர் பேசி உள்ளார்.

சமந்தா புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இந்த ஃபேமிலி மேன் 2  சீரிஸ் தப்பாக நினைத்தவர்களுக்கு உண்மையை சொல்லும் விதமாக அவர் சிலவற்றை இங்கு குறிப்பிட்டுள்ளார்.

samanatha
samanatha

ஃபேமிலி மேன் 2 நான் நடித்த கதாபாத்திரம் ராஜ் என தெரிவித்தார். இந்த வெப்சீரிஸ் நடிப்பதற்கு முன்பாக இலங்கை தமிழர் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதையும் ஈழப்போரில் பெண்களின் உண்மைத் தன்மையையும் ஆவண புகைப்படங்களையும் தனக்கு இயக்குனர் கொடுத்தார் என தெரிவித்தார்.

அந்த ஆவண புகைப்படத்தில் சில ஆயிரம் ஈழத் தமிழர்கள் மட்டும்தான் படத்தில் இருப்பதை பார்த்தேன். பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்ததை பெரிதாக பொருட்படுத்தாமல் இருப்பதை உணர்ந்தேன்.

மேலும் இந்த போரினால் உடமைகளை இழந்து வீடுகளை இழந்து ஈழத்தமிழர்கள் பல்வேறு நாடுகளில் ஈழ தமிழர்கள் வாழ்ந்து வரும் அவலத்தை கண்டேன்.

இது அனைத்தையும் அறிந்த பிறகுதான் இதில் நடிக்கவே ஆரம்பித்தேன். நான் நடித்தது கற்பனை கதாபாத்திரம் என்றாலும் ஈழப் போரில் உயிரிழந்தவர்களுக்கு இதை நான் சமர்ப்பிக்கிறேன் என்று கூறினார்.