தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராகத் தெரிந்தவர்கள் நடிகை நித்யா மேனன் மற்றும் பார்வதி நாயர். இவர்கள் இருவரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரக்னன்சி பாஸிட்டிவ் போட்டோவை வெளியிட்டிருந்தனர் இதனால் அதிர்ச்சியான ரசிகர்கள் திருமணம் ஆகாமல் எப்படி கர்ப்பமானார்கள் என்று கமெண்ட் செய்து வந்தனர்.
ஆனால் அது ஒரு பிரமோஷன் என்று ஒரு தகவல் வந்ததால் தற்போது ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். மலையாள திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன். அதன் பிறகு 2008 ஆம் ஆண்டு வெளியான ஆகாச கோபுரம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து நடிகை நித்யா மேனன் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருடைய அந்த கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது அது மட்டுமல்லாமல் தற்போது உள்ள இளைஞர்கள் இதுபோன்ற பெஸ்டி வேண்டுமென்று பிடிவாதம் பிடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை நித்யா மேனனும் பார்வதி நாயரும் பிரக்னன்சி பாஸிட்டிவ் கிட் புகைப்படத்தை வெளியிட்டிருந்தனர். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கல்யாணமே ஆகல அதுக்குள்ள கர்ப்பமா என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். ஆனால் இதெல்லாம் ஒரு பிரமோஷன் தான் என்ற தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
அதாவது நித்யா மேனன் பார்வதி நாயர் தற்போது தெலுங்கு திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளனர் அந்த படம் தற்போது முடிவடையும் நிலையில் இருக்கிறது. இந்த படத்திற்காக பிரமோஷன் செய்வதற்காக தான் பிரக்னன்சி பாசிட்டிவ் கிட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து ப்ரோமோஷன் செய்திருக்கிறார்கள். இந்த தகவல் அண்மையில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது அது மட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் கர்ப்பம் இல்லை என்று தெரிந்து ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர்.