யுவராஜ் 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடிக்க இதுவே உணமையான காரணமாம்.? அவரே கூறிய தகவல்.

yuvraj
yuvraj

இந்திய அணியில் அதிரடி ஆட்டக்காரர்கள் பேர் போனவர்கள் வெகு சிலரே சேவாக் பிறகு அதிகம் பேசப்பட்டவர் யுவராஜ் சிங் தான். இவரது ஆட்டம் ஒவ்வென்று அதிரடிக்கு பஞ்சம் இருக்காது. அந்த அவ்வளவு அடித்து நொறுக்குவார். அதனால் மக்கள் மற்றும் ரசிகர்கள் வெகுவாக இடம் பிடித்தார்.

யுவராஜ் சிங் பல முக்கியமான போட்டிகளில் சிறப்பாக ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார் அந்த வகையில் 2011 உலக கோப்பை , 2007ம் ஆண்டு உலக கோப்பை டி20 தொடரில் பல அதிரடியான இன்னிங்சை விளையாடி கோப்பையை கைப்பற்ற மிக உதவிகரமாக இருந்தவர் யுவராஜ் சிங்.

அதிலும் குறிப்பாக 2007ம் ஆண்டு உலக கோப்பை டி20 தொடரில் இங்கிலாந்து உடனான போட்டியில் யுவராஜ் சிங் 6 சிக்சர்கள் விளாசி புதிய சாதனை படைத்திருப்பார் மேலும் 12 பந்துகளில் 50 ரன்களை அடித்துள்ளார் இந்த சாதனையை தற்போது வரையிலும் நெருங்க கூட முடியாமல் இருந்து வருகின்றனர்.

இங்கிலாந்து உடனான அந்த ஒரே போட்டியில் யுவராஜ் சிங் பல சாதனைகளை செய்து இருந்தார். அதிலும் குறிபாக பிளின்டாப் சண்டை குறித்து விவரமாக யுவராஜ் சிங் கூறியுள்ளது. பிளின்டாப் ஓவரில் இரண்டு நல்ல பவுண்டரிகள் அடித்தேன் அப்பொழுது அவர் கடுப்பாகிவிட்டார்.

அப்போ என்னை வந்து பார்த்து இங்கே வா உன் கழுத்தை திருகி விடுகிறேன் என்றார் நான் என்ன சொன்னேன் என் பேட் எங்கெல்லாம் போகும் என்பது உனக்கு தெரியும் என்றேன். இது மிகவும் சீரியசான சண்டையாக அப்போது இருந்தது என் மனதில் தோன்றியது ஒவ்வொரு பந்தையும் மைதானத்திற்கு வெளியே அடிக்க வேண்டும் என்று ஆத்திரம் வந்தது.

அப்பொழுது பிராட் வீசிய முதல் பந்தை அதிர்ஷ்டவசமாக சிக்ஸர் அடித்தேன் அதன் பிறகு ஒவ்வொரு பந்தையும் நாலாபக்கமும் பறக்க விட்டேன். அதிலும் 3வது பந்தை பாயிண்ட் ஆஃப் திசையில் சிக்ஸர் அடித்தேன் என் வாழ்நாளில் அது போன்ற ஒரு சிக்ஸர் அடித்தது இல்லை.

flint off
flint off

தொடர்ந்து சிக்சர்களை பார்க்க விடாததால் இங்கிலாந்து அணியின் கேப்டன் காலிங்வுட் வந்து பிராட்டிடம் லாங் ஆஃப் திசையில் யார்க்கர் பந்து வீச சொன்னார் என் காதில் விழுந்தது உடனே நான் அந்த பந்தை ஆஃப் திசையில் அடித்தேன்.

yuvraj
yuvraj

பிறகு எனக்கு தெரிய ஆரம்பிதது எப்படியும் அவர் கடைசி பந்தை யார்கர் தான் போடுவார் என்று நினைத்தேன் அது போல் அமைந்தது. அந்த பந்தை தூக்கி  அடித்து சிக்ஸர் அடித்து அசத்தினேன் . பின் பிளின்டாப்பை பார்த்து சிரித்தேன்.