தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் இருந்து பல்வேறு படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்த வாறு நடிகை சில்க் ஸ்மிதா. இவர் வண்டிச்சக்கரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை சில்க் ஸ்மிதா சினிமாவில் சாவித்திரி போல திறமையை காட்ட விரும்பிய இவருக்கு இவரது உடலழகு அதை மாற்றிக் கொடுத்தது.
இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ஆரம்பத்திலிருந்தே கவர்ச்சியான கதா பாத்திரங்களையே பெரிதும் நடிக்க வைத்து அழகு பார்த்தனர். ஒரு கட்டத்தில் அவரும் அதிலேயே மூழ்கி நடிக்க ஆரம்பித்தார். இதனால் அவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் மளமளவென உருவாகினர். சினிமாவுலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது.
பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது இதுகுறித்து அவருக்கு டப்பிங் குரல் கொடுத்த ஹேமமாலினி, சில்க் ஸ்மிதா குறித்து சில முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து உள்ளார். அதில் அவர் கூற வருவது சில்க் ஸ்மிதா நல்ல மனசு உள்ள பொண்ணு சின்ன சின்ன விஷயங்களுக்கு ரொம்ப எமோஷனல் ஆகிவிடுவார் தொலைபேசியில் பேசுகிற அளவுக்கு நாங்க ரெண்டு பேரும் நல்ல நெருக்கமானவாங்க கிடையாது.
ஆனால் நேரில் சந்தித்து கொண்டால் மனம் விட்டு பேசுவோம் என்கிட்ட சில விஷயங்கள் ஷேர் பண்ணி இருக்கா. சில்க் ஸ்மிதாவுக்கு சாவித்திரியை ரொம்ப பிடிக்கும் அவரை போல் மாதிரி நடிப்பில் சாதிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை ஆனால் எதிர்பாராதஒன்று நடந்தது.
சாவித்திரி மாதிரி நடிக்கணும் ஆகணும்னு சொல்லுவா ஆனா அவளுக்கு கிடைத்தது கவர்ச்சி ரோல்தான் சினிமாவுலகம் கவர்ச்சிப் பொருளாக மட்டும் தான் பார்த்தது. இப்ப அவரோட கவர்ச்சியான உடம்பு மட்டும்தான் நம்ம கண்ணுக்கு நினைவில் இருக்கு அவர் உயிரோடு இருந்திருந்தா இன்னைக்கு கண்டிப்பா அவருடைய வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பா சின்ன சின்ன விஷயத்துக்கும் எமோஷன் திடீர் திடீரென முடிவு எடுப்பா.. அதுதான் அவளுடைய தற்கொலைக்கு காரணமாக இருக்கும் என கூறுகிறார்.