ஜகமே தந்திரம் திரைப்படத்தில் தனுஷுக்கு மட்டும் இத்தனை கோடி சம்பளமா.! அதிர்ந்துபோன கோலிவுட் வட்டாரங்கள்

jekamethanthiram
jekamethanthiram

அசுரன் மற்றும் கர்ணன் போன்ற திரைப்படங்களுக்கு பிறகு தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் திரைப்படம் வெளிவற உள்ளது. அசுரன் மற்றும் கர்ணன் இரண்டு திரைப்படங்களும் சமூகத்திற்கு நல்ல கருத்தைக் கூறும் வகையில் அமைந்திருந்தது அதோடு மட்டுமல்லாமல் தனுஷும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அந்த வகையில் இத்திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் பெற்றது.

இந்த இரண்டு திரைப்படங்களும் தனுஷின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. இத்திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் அசுரன் திரைப்படம் வரும் 18ஆம் தேதி நேற்ஃபிலிம்ஸ் வழியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் தனுஷ்,  ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு மற்றும் அதில் நடித்துள்ள நடிகர் நடிகைகளின் சம்பளம் போன்றவற்றை பற்றி தற்போது பார்ப்போம். இத்திரைப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார் அந்த வகையில் சந்தோஷ் நாராயணன் 75 லட்சம் சம்பளம் வாங்கி உள்ளார் என்று கூறப்படுகிறது.

இவரைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் கிட்டத்தட்ட 15 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளார், இத்திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் 5 கோடி என்று இத்திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 55 கோடி ஆகும்.

jekame thanthiram 1
jekame thanthiram 1

இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான சக்கரவர்த்தி மற்றும் ராமச்சந்திரா இருவரும் இப்படத்திற்காக வாங்கி கடனுக்கு 10 கோடி வட்டி கட்டி உள்ளார்கள். அந்தவகையில் கிட்டதட்ட 65 கோடி வரை திரைப்படத்தின் பட்ஜெட் உள்ளது. இந்த தகவலை சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.

இத்திரைப்படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய தான் தனுஷ் ஆசைப்பட்டாராம் ஆனால் தற்பொழுது நெருக்கடி மிகவும் அதிகமாக  இருப்பதால் OTT வழியாக ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்கள்.