தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் உச்ச நட்சத்திர நடிகர்களான அஜித், விஜய், ரஜினி, சூர்யா, தனுஷ் போன்ற நடிகர்களுடன் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார். இதனால் நயன்தாராவின் மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
மேலும் சோலோ படங்களிலும் நடித்து வெற்றியை ருசிக்கிறார் இப்பொழுது ஒரு படத்திற்கு சுமார் ஆறு கோடியிலிருந்து 10 கோடி வரை வாங்குவதாக சொல்லப்படுகிறது. சினிமாவில் வெற்றியை ருசித்த நயன்தாரா விக்னேஷ் சிவன் என்பவரை கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில் ஒரு வழியாக கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி.
அனைவரது முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு இருவரும் கொஞ்ச நாட்கள் ஊர் சுற்றி வந்தனார். இருப்பினும் பட வாய்ப்புகள் அதிகம் கிடப்பில் இருந்ததால் இருவரும் தனது வேலையை பார்க்க ஆரம்பித்தனர். நயன்தாரா கையில் தற்போது ஜவான், கோல்ட், கனெக்ட் ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றனர்.
இது தவிர தனது 75வது திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். நயன்தாரா இப்படி ஓடிக்கொண்டிருக்க மறுப்பக்கம் அவரது கணவர் விக்னேஷ் சிவன் அண்மையில் நடந்த செஸ் ஒலிம்பியா போட்டியை சிறப்பாக நடத்தினார் தற்போது அதை அவர் வெற்றிகரமாக முடித்தார். நடிகை நயன்தாராவும் தற்போது ஃப்ரீயாக இருப்பதால் இருவரும் தற்பொழுது வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இருவரும் ஸ்பெயின் நாட்டுக்கு சென்று பத்து நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு பின் வருவார்கள் என தெரிய வருகிறது வந்தவுடன் லேடி சூப்பர் நயன்தாரா கிடப்பில் கிடக்கும் படங்களை முடித்துவிட்டு உடனே அஜித்தின் AK 62 படத்திற்கான வேலையில் இறங்குவார் என கூறப்படுகிறது. விக்னேஷ் சிவனும் அந்த வேலையை தான் பார்ப்பார் என தெரியவருகிறது.