Leo : லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய் உடன் கைகோர்த்து “லியோ” திரைப்படத்தை எடுத்து வருகிறார். படம் மிகப் பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகியுள்ளதாம். தளபதி விஜய் உடன் கைகோர்த்து சஞ்சய் தத், மிஷின், மன்சூர் அலிகான், அர்ஜுன், பிரியா ஆனந்த், திரிஷா, பிக் பாஸ் ஜனனி சாண்டி மாஸ்டர் மேத்யூ தாமஸ் பாபு ஆண்டனி என பலர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் லியோ திரைப்படம் குறித்து பிரபல வில்லன் நடிகர் பாபு ஆண்டனி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் அவர் சொன்னது லியோ படத்தில் விஜயுடன் நடித்தது மிகவும் பெருமையாக இருக்கிறது. மலையாள படம் ஒன்றை பார்த்துவிட்டு தான் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் நடிக்க என்னை அழைத்தார்.
இந்த கேரக்டர் வழக்கமாக என்னை பார்த்து பயப்படும் கதாபாத்திரம் போல் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான கதாபாத்திரமாக இருக்கும் தமிழ் மக்களுக்கு நன்றி சஞ்சய் தத் பிறந்த நாளுக்கு வெளியான Glimpse வீடியோவில் சஞ்சய் தத் பின்னால் நான் நின்று கொண்டிருப்பேன்.
அந்த சின்ன வீடியோவை பார்த்த மக்கள் பாபு ஆண்டனி என்று கண்டுபிடித்து விட்டார்கள் இது உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது தமிழ் ரசிகர்கள் மனதில் எனக்கு ஒரு இடத்தை கொடுத்ததற்கு நன்றி டாக் லெஸ் ஓர்க் மோர்.. லோகேஷ் கனகராஜ் படப்பிடிப்பில் அதிகம் பேசவே மாட்டார்.
ஏதாவது முக்கியமான விஷயம் என்றால் அவருடைய டீமிடம் முதலில் கலந்து பேசிக்கொள்வார்கள் அதன் பிறகு தான் தனியாக நடிகர்களிடம் வந்து சொல்வார்கள். லியோ திரைப்படம் ரொம்ப வித்தியாசமான மாஸ் திரைப்படமாக இருக்கும் இந்த படத்தில் விஜய் உடன் பல காட்சிகள் வருவேன். இந்த படத்தில் விஜயின் கதாபாத்திரத்தின் பெயர் லியோ என்று கூறியுள்ளார்.