Vidaamuyarchi : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து மாஸ் காட்டி வருவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அதிக நாட்கள் ஓடி 230 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது அதனை தொடர்ந்து லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி.
படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது அவருக்கு ஜோடியாக த்ரிஷா, ரெஜினா போன்றவர்கள் நடிக்கிறார்கள் மேலும் படத்தில் பிக்பாஸ் ஆரவ், அர்ஜுன், ப்ரியா பவானி சங்கர் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகன்களா.. குடும்பத்துடன் கிறிஸ்மஸ் கொண்டாடிய நடிகை
இந்த படத்திற்காக அஜித் சுமார் 12 கிலோ உடல் எடையை குறைத்து நடித்து வருகிறாராம் படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் வெளிநாட்டில் 60 நாட்கள் நடத்தப்பட்ட நிலையில் தற்போது பட குழு ஓய்வு எடுத்து வருகிறது இரண்டாவது கட்ட ஷூட்டிங் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என தெரிவிக்கின்றன.
படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து அடுத்த வருடம் அஜித்தின் பிறந்தநாள் மே ஒன்றாம் தேதி படத்தை வெளியிட பட குழு முடிவு செய்துள்ளதாம் இப்படி இருக்கின்ற நிலையில் விடாமுயற்சி படத்திலிருந்து ஒரு சூப்பரான அப்டேட் வெளியாகி உள்ளது அதாவது முயற்சி படத்தில் அஜித்தின் பெயர் அர்ஜுன் என தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்து வருகிறார். அவரது பெயரை தற்போது அஜித்திற்கு மகிழ் திருமேனி வைத்துள்ளதால் இந்த விஷயத்தை ரசிகர்கள் சோசியல் மீடியா பக்கத்தில் கொண்டாடி வருகின்றனர்.