சினிமா உலகிலும் சரி, நிஜத்திலும் சரி நான் கஷ்டப்பட்ட நேரத்தில் உதவிய மனிதன் இவர் தான்.? நடிகர் சரத்குமார் உருக்கான பேச்சு.!

sarathkumar
sarathkumar

சினிமா உலகில் எவ்வளவு புகழ்ச்சியை எட்டினாலும் ஒரு சிலர் தனது நட்பை மறக்காமல் இன்றுவரையிலும் இருந்து அதே நட்புடன் வலம் வருகின்றனர் அந்த வகையில்  அஜித் – சுரேஷ் சந்திரா, விஜய் – சஞ்சீவ்,  ரஜினி – கமல் என ஒவ்வொருவரும் நட்புடன் வலம் வருகின்றனர்.

இவர்களைப் போல அப்படி ஒரு நட்பு தான் நடிகர் சரத்குமாரும் கிடைத்தது. தமிழ் சினிமா உலகில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் எது கொடுத்தாலும் அதில் தனது திறமையை காட்டி பேரையும், புகழையும் சம்பாதித்தவர். சினிமா உலகையும் தாண்டி நிஜ வாழ்க்கையிலும் இவர் பல நலத்திட்ட உதவிகளையும் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சரத்குமார் உடைய நெருங்கிய நண்பர் வேறு யாருமல்ல நடிகரும், இயக்குனருமான கே எஸ் ரவிகுமார் தான். இவர்கள் இருவரும் எப்பொழுது சந்தித்து கொண்டனரோ அப்பொழுது இருவரும் நண்பர்களாக மாறினர். பின் இருவரும் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றியுள்ளனர் அந்த வகையில் சேரன் பாண்டியன், நாட்டாமை போன்ற பல்வேறு இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் பண உதவி எந்தக் கஷ்டமாக இருந்தாலும் இருவரும் மாற்றி மாற்றி உதவி செய்து கொண்டுள்ளனர் அப்படித்தான் ஒரு தடவை நடிகர் சரத்குமாருக்கு உடல்நிலை சரியில்லாத போது  சரத்குமாருக்கு நாட்டாமை படத்தின் கதையை எழுதி இருந்தார் ஆனால் அந்த படத்தை சரத்குமாரை வைத்து மட்டுமே எடுப்பேன்.

என ஒத்த காலில் நின்று அவரது உடம்பு சரியான பின்  சரத்குமாரை வைத்து இந்த படத்தை எடுத்து வெற்றி கண்டார் அதேபோல சரத்குமாருக்கு பணக் கஷ்டமும் சரி எந்த உதவியாக இருந்தாலும் முதல் ஆளாக ஓடி வருபவர் கேஎஸ் ரவிக்குமார் தானாம் இதனை மேடையில் பல முறை சரத்குமார் பேசி உள்ளார்.