வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு பதில் இந்த முன்னணி நடிகரா.! பக்கா பிளான் போடும் பாலா…

surya
surya

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கம் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார் அது மட்டுமல்லாமல் அடுத்ததாக முன்னணி இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் இதற்கான பயிற்சிகளும் முடிந்துவிட்டது. இதனை தொடர்ந்து வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும்  நடிகர் சூர்யா அவர்கள் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வந்தார் ஆனால் இந்த கதையில் ஏற்பட்ட மாற்றத்தினால் சூர்யா அவர்கள் இந்த படத்திலிருந்து விலகி விட்டதாகவும் அவருடைய தயாரிப்பு நிறுவனமும் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

அதுமட்டுமல்லாமல்  வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா அவர்கள் முழு சம்மதத்துடன் தான் வெளியேறினார் என்று இயக்குனர் பாலா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாதியில் நிறுத்தப்பட்ட வணங்கான் படத்தின் போஸ்டர் கூட வெளியாகி வைரலானது அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா, ஒரு காது கேட்காத வாய் பேசாத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்பட்டது இதனால் ரசிகர்கள் சூர்யா ஒரு புதிய முயற்சியில் இறங்கியதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது.

ஆனால் படத்தின் கதை பிடிக்காத ஒரு காரணத்தால் நடிகர் சூர்யா அந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது இந்த நிலையில் வணங்கான் திரைப்படத்தில் தற்போது வேறு ஒரு முன்னணி நடிகரை நடிக்க வைக்க பாலா அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது வணங்கான் திரைப்படத்தில் சூர்யாவுக்கு பதிலாக நடிகர் அதர்வாவை இந்த படத்தில் நடிக்க வைக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதர்வா மற்றும் பாலா கூட்டணியில் உருவான பரதேசி திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று அதர்வாவை ஒரு சிறந்த நடிகராக சினிமாவிற்கு கொண்டு வந்தார் பாலா.

vanankan
vanankan

அதேபோல வணங்கான் திரைப்படத்தில் நடிகர் அதர்வா தனது முழு உழைப்பை போட்டு நடிப்பார் எனவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அதர்வா இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் விரைவில் படப்பிடிப்பு தொடங்கலாம் என படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.