நடுவர் செய்யுற வேலையா இது..? இளைஞரை எங்கரேஜ் செய்யும் வகையில் கன்னத்தை கடித்த பூர்ணா..!

poorna

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் அழகும் திறமையும் இருந்து முன்னணி நடிகை என்ற வாய்ப்பை பெற முடியாமல் கஷ்டப்பட்டு வருபவர்கள் ஏராளம் அந்த வகையில் நடிகை பூர்ணாவும் ஒருவர் இவரை ரசிகர்கள் பலரும் குட்டி அசின் என்று தான் அழைப்பார்கள்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் முதன் முதலாக முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவில் கால்தடம் பதித்தார் இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் பரத் மற்றும் வடிவேலு பொன்வண்ணன் போன்றவர்கள் நடித்துள்ளார்கள்.

மேலும் இத்திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த நமது நடிகை அதன்பிறகு தெலுங்கு மலையாளம் என பிசியாக நடிக்க ஆரம்பித்து விட்டார்.  பின்னர் சினிமாவில் சரியான வாய்ப்பு கிடைக்காததன் காரணமாக சசிகுமார் நடிப்பில் வெளியான கொடி வீரன் திரைப்படத்தில் கூட வில்லனுக்கு மனைவியாக நடித்து இருப்பார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தில் அவருக்கு கொடுத்த கதாபாத்திரம் மிகவும் மோசமாக இருப்பதன் காரணமாக அவர் மொட்டை அடிக்க வேண்டியதாக இருந்தது இந்நிலையில் அவரின் திரைப்படத்திற்காக மொட்டை அடித்துக் கொண்டும் நடித்துள்ளார் பொதுவாக எந்த ஒரு நடிகையும் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

poorna-1
poorna-1

அந்தவகையில் இவர் அவ்வளவு கஷ்டப்பட்டு நடித்த திரைப்படமும் தோல்வியை தான் கொடுத்தது இந்நிலையில் நமது நடிகை தெலுங்கில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் ஜோடி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார்.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் நன்றாக நடனம் ஆடிய இளைஞர் ஒருவருக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார் இவ்வாறு அவர் கொடுத்த முத்தம் சாதாரணமாக இல்லாமல் அவருடைய கன்னத்தை கடித்து கொடுத்ததன் காரணமாக நடுவர் செய்யும் வேலையா இது என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.