சின்னத்திரை சீரியல்களில் டிஆர்பியில் டாப் லிஸ்டில் இருக்கும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி தொடர். இந்த தொடர் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு சிறந்த சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் இல்லத்தரசி பெண்ணாக நடித்து வரும் சுஜித்ராவின் எதார்த்தமான நடிப்பு.
மக்கள் பலரையும் கவர்ந்து இழுத்து உள்ளது. ஆனால் பாக்யாவின் வெகுளி தனத்தைப் பயன்படுத்திக் கொண்டு பாக்யாவின் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வருகிறார். மேலும் திருமணமாகி 25 ஆண்டுகள் கடந்த பிறகும் கோபி அவரது கல்லூரி காதலியான ராதிகாவை திருமணம் செய்து கொள்ள முனைப்பு காட்டி வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் விஜய் டிவியில் விஜய் டெலி அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பாக்யலக்ஷ்மி தொடரில் நடித்து வரும் நடிகர் நடிகைகளும் பல விருதுகளை வாங்கினார்கள். சிறந்த நாயகிக்காக பாக்யலக்ஷ்மி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜித்ரா விருது வாங்கினார்.
அவரது மூத்த மகனாக எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷால் துணை நடிகருக்கான விருது வாங்கியுள்ளார். விருது வாங்கிய பின் மேடையில் பேசிய விஷால் பாக்கியலட்சுமி சீரியல் டீம்க்கு நன்றி கூறி பேசி வந்தார் அப்போது எழில் பேசும்போது அதிகம் ராஜா ராணி சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் ரியா விசுவநாதனை தான் எழில் பேசும்போது விஜய் டிவி டீம் காட்டினார்கள்.
அதனால் இந்த நிகழ்ச்சியை பார்த்த நெட்டிசன்கள் பலரும் விஷால் மற்றும் ரியா இருவரும் காதலிக்கிறார்கள் என பேசி வருகின்றனர். ஆனால் இதுபற்றி அவர்கள் இருவரும் விளக்கம் தந்தால் தான் உண்மை என்னவென்று தெரியும்.