சங்கீதாவிற்கு முன் விஜய்க்கு பார்க்கப்பட்ட பெண் இவரா.? தளபதியின் ஆசையால் தம்பி மகளை தூக்கி எறிந்த ஷோபனா

Vijay
Vijay

Vijay : தமிழ் சினிமாவில் இன்று டாப் ஹீரோவாக வருவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூலை வெற்றி கண்டதை தொடர்ந்து வெங்கட் பிரபுவுடன் கூட்டணி அமைத்து தளபதி 68 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். படத்தில் 90 ஸ் நடிகர்களான மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, லைலா..

சினேகா என பல பட்டாளங்கள் நடிப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. திரை உலகில் வெற்றி நடிகராக ஓடும் விஜய்யை தொடர்ந்து அவரது மகன் ஜேசன் சஞ்சையும் லைகா தயாரிப்பில் ஒரு படம் பண்ண இருக்கிறார். இப்படி குடும்பமே சினிமாவில் ஆர்வம் காட்டி வருகிறது.

ஆறக்கடக்கிற வரைக்கும் அண்ணன்னு சொல்லுவீங்க.! ஆற கடந்தா யாருன்னு கேப்பிங்க.. 5 நடிகர்களை அடக்கி வைத்த வடிவேலு..!

இருந்தாலும் குடும்பத்தை நல்லபடியாக அவருடைய மனைவி சங்கீதா வழிநடத்தி வருகிறார். விஜய் சங்கீதா திருமணம் அரங்கேறியது எப்படி என்றால் ஒரு தடவை சங்கீதா ஷுட்டிங்ஸ் பாட்டில் விஜயை ஒரு ரசிகையாக பார்க்க வந்தார் அப்பொழுது எஸ் ஏ சந்திரசேகரும், ஷோபாவுக்கும் விஜய்க்கு சங்கீதாவை திருமணம் செய்து வைக்கலாம் என முடிவு எடுத்து விஜய் இடம் கேட்க..

அதற்கு ஓகே சொன்னாதால் திருமணம் நடந்து முடிந்ததாம். இந்த நிலையில் பயில்வான் ரங்கநாதன் விஜய் முதன் முதலில் வேறொரு பெண்ணை  திருமணம் செய்த இருந்ததாக கூறியுள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. விஜயின் தாய் ஷோபனாவின் தம்பி சுரேந்தர். அவர் சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகராக இருந்தார்.

பப்பு, பார்ட்டின்னு ஜாலியா இருந்த மனுஷனை அடக்கி போட்ட தளபதி 68.! எகுறும் எதிர்பார்ப்பு

அவரது மகளை தான் முதலில் விஜய்க்கு திருமணம் செய்து வைக்கும் முடிவில்  எஸ் ஏ சந்திரசேகரும் ஷோபனாவும் இருந்தார்கள் அதற்குள் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் காதல் மலர்ந்ததால் மேலும் ஏசி ஏ சந்திரசேகருக்கும், சோபாவுக்கும் சங்கீதாவை ரொம்ப பிடித்ததால் சுரேந்திரரின் மகளை எடுக்கும் முடிவில் இருந்து பின்வாங்கி விட்டார்களாம்.