தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிக்கும் நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான் இவர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றி கண்டார் இதனை தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருவது மட்டுமில்லாமல் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் முடிய போவதாகவும் தற்போது அடுத்த திரைப்படத்தின் வேலையை தளபதிவிஜய் ஆரம்பிக்க உள்ளார் என்ற செய்தியும் வெளியாகி உள்ளன.
இது ஒரு பக்கமிருக்க தளபதி விஜய்யின் மெகா ஹிட் திரைப்படங்களில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த துப்பாக்கி திரைப்படமும் ஒன்று இந்த திரைப்படமானது மாபெரும் வெற்றி பெற்றதன் காரணமாக பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது
இந்நிலையில் இத் திரைப்படம் வெளியாகி ஒன்பது வருடங்கள் ஆன நிலையில் இந்த திரைப்படத்தின் டைட்டிலை ட்ரெண்டிங் செய்துவருகிறார்கள் தளபதி ரசிகர்கள். பொதுவாக ஒரு திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாக அந்த திரைப்படத்தில் பல்வேறு மாற்றங்கள் நடைபெறும்.
அந்த வகையில் துப்பாக்கி திரைப்படத்திலும் சில மாற்றங்கள் நடந்துள்ளது. அந்த வகையில் நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படத்தின் டைட்டில் முதன்முதலாக மாலை நேரத்து மழை துளி என்றுதான் பெயர் வைக்கப்பட்டார்கள்.
அதன் பிறகு சில பல காரணத்தின் மூலமாக இந்த திரைப்படத்தின் பெயர் துப்பாக்கி என பெயரிடப்பட்டது. நல்ல வேலை இந்த திரைப்படத்தின் பெயரை மாற்றி விட்டார்கள் ஒரு வேளை அந்த பெயரிலும் திரைப்படத்தை வெளியிட்டால் இந்த திரைப்படம் ஹிட் ஆகுமா என்பது சந்தேகம்தான்.