ஹிந்தியில் பெரிதும் இருக்கும் நடிகைகள் பலரும் உடம்பை ஸிலிம்மாக வைத்துக் கொண்டு கவர்ச்சி காட்டத் தான் விரும்புகின்றனர் ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நடிகையாக உள்ளவர் தான் நடிகை கங்கனா ரனாவத். படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது நடிப்பு திறமையை மாற்றிக்கொண்டு நடிப்பது கங்கனா ரனாவத் இது மிகவும் பிடிக்கும் மேலும் படத்தின் கதையின்படி கவர்ச்சி காட்டவும் ரெடியாக இருப்பார்.
ஹிந்தி சினிமாவில் பெரிதும் நடித்து இருந்தாலும் தமிழில் இவர் தாம் தூம் திரை படத்தை தொடர்ந்து மீண்டும் தமிழில் இவர் இயக்குனர் எ. எல். விஜயுடன் கைகோர்த்து “தலைவி” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமா உலகில் தனது பயணத்தை தொடரலாம் என கணக்குப் உள்ளார்.
நடிகை கங்கனா ரனாவத் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவான படத்தில் நடித்தார். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு முதலிருந்தே அதிகரித்த நிலையில் தியேட்டரில் இப்திரைப்படம் வெளியாகியது. இந்திய நாடு முழுவதும் சுமார் 1500 திரையரங்குகளில் வெளிநாட்டில் சுமார் 200 திரையரங்குகளும் வெளியாகியதாக கூறப்படுகிறது ஜெயலலிதாவின் படம் என்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தமிழில் உச்சத்தில் இருந்தது.
இதனால் முதல் நாள் வசூல் 20 கோடியில் இருந்து 30 கோடி இருக்கும் வரை என கணிக்கப்பட்டது ஆனால் சொல்லிக்கொள்ளும்படி மிகப்பெரிய வசூலை இந்த படம் ஈட்டவில்லை. இந்த படம் தமிழகத்தில் மட்டும் வெறும் 50 லட்சத்தை கூட தாண்டவில்லை அது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. மேலும் லைவி படம் மிகப்பெரிய வசூலை ஈட்டுமா என்பது தற்போதைய நிலவரப்படி கேள்விக்குறியாக மாறியுள்ளது.
தலைவி திரைப்படம் OTT தளத்தில் வெளியாகி இருந்தால் கூட மிகப்பெரிய ஒரு தொகை கைப்பற்றி இருக்கும் ஆனால் தற்போது இந்த படம் மிகப்பெரிய ஒரு வெற்றியை ருசித்தாலும் கோடிக்கணக்கில் வசூல் கைப்பற்றுவது கேள்வி தான் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்கலாம் என நடிகை கங்கனா ரனாவத் நினைத்து கொண்டு இருந்தார் அது அவருக்கு தற்போது ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.