90 காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து ஓடி கொண்டிருப்பவர் நடிகர் பிரசாந்த். ஆரம்ப காலகட்டத்தில் இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி படமாகவே மாறின இதனால் டாப் நடிகராக அப்பொழுது பார்க்கப்பட்டார் பிரசாந்த்.
முதலில் இவர் வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பின் இவர் மலையாளம் தெலுங்கு, இந்தி என மற்ற மொழிகளிலும் தொடர்ந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது இருப்பினும் அங்கேயும் வெற்றியை ருசித்தால் இவரது வளர்ச்சி அமோகமாக இருந்தது குறிப்பாக தமிழில் இவர் சொல்லவே வேண்டாம் தொட்டதெல்லாம் தங்கமாக மாறியது.
அந்தவகையில் கண்ணெதிரே தோன்றினாள், ஜீன்ஸ், ஜோடி, பார்த்தேன் ரசித்தேன், அப்பு, ஸ்டார், சாக்லேட், மஜுனு, தமிழ், வின்னர், ஜெய் போன்ற படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் படங்கள் தான். இப்படி ஓடிக்கொண்டு இருந்தாலும் ஒரு கட்டத்தில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்காமல் போனதால் தோல்வியை தழுவ ஆரம்பித்தார். மேலும் உடல் எடையையும் ஏற்றியதால் சுத்தமாக பட வாய்ப்புகளும் குறைய தொடங்கியது.
இதனால் இவருக்கு பின்னால் இருந்த நடிகர்கள் கூட உச்ச நட்சத்திரமாக மாறினார் இருப்பினும் சினிமாவில் இன்றளவும் நடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் பெரிய அளவில் படங்கள் ஹிட் அடிக்காமல் போருகின்றன இந்த நிலையில் அவரது அப்பா தயாரிப்பில் பிரசாந்த் நடித்துவரும் திரைப்படம் தான் அந்தகன். இந்தப் படம் ஒரு ரீமேக் திரைப்படமாக இருந்தாலும்..
தற்போது இந்த திரைப்படம் அதிரடியாக உருவாகி வருகிறது இந்த படத்தில் சிம்ரன் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பிரியா ஆனந்த், யோகிபாபு, கார்த்திக், ஊர்வசி, கேஎஸ் ரவிக்குமார், மனோபாலா என மிகப்பெரிய ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் பிரசாந்த் பலவிதமான கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் ஒன்றாக சமீபத்தில் உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது என கேட்டனர் அதற்கு அவர் சமீபத்தில் வெளிவந்த படங்களில் எனக்கு பிடித்த திரைப்படம் விஷ்ணு விஷாலின் எப்ஐஆர். அந்த திரைப்படம் சிறப்பாக இருந்தது நல்ல கதை களம் உள்ள திரைப்படங்கள் எப்பொழுதுமே எனக்கு பிடிக்கும் எனவும் கூறியுள்ளார்.