நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பிடித்த விளையாட்டு இதுவா.? இத்தனை நாளா இது தெரியாம போச்சே..

SIVAKARTHIKEYAN
SIVAKARTHIKEYAN

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் நடிக்க தொடங்கியது முதல் மிக வேகமாக வளர்ந்து வருகிறார். இவரது வளர்ச்சியை பார்த்து முன்னணி நடிகர்களே பொறாமைப்படும் அளவிற்கு தற்போது சினிமாவில் முக்கிய நடிகராக ஜொலித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் சின்னத்திரையில் தொகுப்பாளராக பயணித்து வந்தவர்.

பின்பு ஒரு கட்டத்தில் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது அதனை நன்கு பயன்படுத்திக் கொண்டு வருகிறார். அந்த வகையில் அண்மைக்காலமாக வெளிவரும் இவரது படங்கள் ஒவ்வொன்றும் அதிரி புதிரி ஹிட் அடிக்கின்றன. அதற்கு உதாரணமாக சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் போன்ற இரு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து 100 கோடிக்கு மேல் வசுலை அள்ளி குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படங்களை தொடர்ந்து தற்போது பிரின்ஸ், அயாலன், மாவீரன் போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அதில் சிவகார்த்திகேயன் நடித்து வரும்  பிரின்ஸ் படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாக உள்ளது. அதற்கான அறிவிப்பை பட குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடித்து வரும் மாவீரன்.

திரைப்படத்தின் டிரைலரும் சமீபத்தில் வெளிவந்து சிவகார்த்திகேயன் ரசிகர்களை கொண்டாட வைத்தது. முன்பெல்லாம் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடித்து வந்தால் அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியான பிறகு அடுத்த படத்தில் கமிட் ஆகுவார். ஆனால் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு மூன்று படங்களில் கமிட்டாகி நடித்து அசத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சோசியல் மீடியாவில் அவ்வப்போது சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் சிவகார்த்திகேயன் தற்போது அவரது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்று ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.