அரவிந்த்சாமியின் அப்பா இவரா.? உண்மையை சொல்லி அதிர வைத்த சீரியல் நடிகர்

Arvindswamy
Arvindswamy

Arvind Swamy : தமிழ் சினிமாவில் இன்று ஹீரோ, வில்லனாக நடித்து ஓடிக் கொண்டிருப்பவர் அரவிந்த்சாமி முதலில் ரஜினி நடிப்பில் உருவான தளபதி படத்தில் கலெக்டராக நடித்த அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து ரோஜா, பம்பாய், இந்திரா, மின்சார கனவு என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து பெண் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து இழுத்தார்.

இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் சாசனம் படத்திற்கு பிறகு திரையில் நடிப்பதை முற்றிலுமாக தவிர்க்கார். இதனால் அரவிந்த்சாமியின் சினிமா பயணம் முடிந்து விட்டது என தகவல்கள் பரவின. இருந்தாலும் அவருடைய நடிப்பு திறமையை பற்றி பேச்சுகள் வெளிவந்த வண்ணமே இருந்த நிலையில் மணிரத்தினம் கடல் படத்தில் அரவிந்த் சாமியை..

ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து சினிமா உலகுக்கு ரீ என்ட்ரி கொடுக்க வைத்தான் அன்றிலிருந்து இப்பொழுது வரையிலும் வருடத்திற்கு குறைந்தது இரண்டு அல்லது முன்று படங்களில் நடித்து விடுகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான தனி ஒருவன், போகன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் போன்ற படங்கள்..

மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அடுத்தடுத்த படங்களிலும் புக்காகி நடித்து வருகிறார் இப்படி திரையில் ஜொலிக்கும் அரவிந்த்சாமி குறித்து ஒரு தகவல் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. அரவிந்த்சாமியின் தந்தை V.D சாமி என்றுதான் இதுவரை நாம் அனைவருக்கும் தெரியும் ஆனால் அவர் அரவிந்த்சாமியின் தந்தை இல்லை..

பிரபல சீரியல் நடிகர் டெல்லி குமார் தான் அரவிந்த் சாமியின் உண்மையான தந்தையாம். டெல்லி குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் சொன்னது அரவிந்த்சாமி தனக்கு பிறந்தவர் என்றும் அவர் பிறந்தவுடன் தத்து கொடுத்து விட்டதாகவும் கூறினார். குடும்பத்தில் அவ்வபோது வரும் சுப நிகழ்ச்சிகளில் மட்டும் அரவிந்த்சாமி வந்து கலந்து கொள்வார் என தெரிவித்தார்.