96 படத்தில் குட்டி ஜானு தோழியாக நடித்த பிரபலமா இது.! புகைப்படத்தை பார்த்து மெய்சிலிர்க்கும் ரசிகர்கள்..

janu friend

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர்கள் மிகவும் குறைவு என்றே சொல்லலாம் அந்த வகையில் தமிழ் தொலைக்காட்சியில் நடித்து பின்னர் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தேவதர்ஷினி. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான மர்ம தேசம் என்ற தொடரில் நடித்து சின்ன திரையில் அறிமுகமானார்.

அதன் பிறகு பல தொலைக்காட்சியில் தொடர்ந்து நடித்து பிரபலமான இவர் பார்த்திபன் கனவு என்ற படத்தில் நடித்து வெள்ளி திரைக்கு அறிமுகமானார். என்னதான் நடிகை தேவதர்ஷினிக்கு முதல் படமாக இருந்தாலும் மிகப் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் நடிகர் விவேக் அவர்களுக்கு மனைவியாக நடித்து அனைவரையும் கவர்ந்து உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

அதன் பிறகு பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்திலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தியுள்ளார். இந்த நிலையில் கடந்த 2002 ஆம் ஆண்டு சீரியல் நடிகர் சேட்டன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இவர்கள் இருவருக்கும் 14 வயதில் நியாத்தி கடாம்பி என்ற மகளும் இருக்கிறார் இவர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் குட்டி ஜானு அவர்களுக்கு தோழியாக நடித்தவர்தான் நீயாத்தி.

மேலும் தேவதர்ஷினி அவர்கள் விஜயின் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறிய தேவதர்ஷினி மெர்சல் படத்தில் நான் நடித்து இருந்தேன் ஆனால் என்னுடைய காட்சிகளை எடிட்டிங் செய்யும்போது எடுத்து விட்டார்கள். ஆனால் இந்த முறை அப்படி நடக்காது என்று இசை வெளியீட்டு விழாவில் விஜய் அவர்கள் கூறியதாக கூறியுள்ளார்.

மேலும் விஜய் அவர்கள் என் மீது அக்கறை வைத்து கேட்டது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது எனவும் அதோட அவர் என்னை உரிமையாக அக்கா என்று கூப்பிட்டதும் எனக்கு தலைகால் புரியாமல் நடந்து கொண்டதாகவும் நடிகை தேவதர்ஷினி அவர்கள் கூறியுள்ளார்.

இந்த நிலையில் நடிகை தேவதர்ஷினி மகள் நியாத்தி விஜயின் தீவிர ரசிகரை என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் பிகில் படப்பிடிப்பு தளத்தில் தேவதர்ஷினி தன்னுடைய மகளை அழைத்துச் சென்றுள்ளார் அப்போது விஜய் அவர்கள் பிஸியாக இருந்ததால் எப்படியாவது விஜய் உடன் ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்று நியாத்தி ஆசைப்பட்டுள்ளார்.

ஆனால் அவர் நினைத்தது வேற நடந்தது வேற என்ற அளவிற்கு விஜய் அவர்கள் சூட்டிங்கை முடித்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டாராம். அதன் பிறகு ரொம்ப நேரம் கழித்து நடிகர் விஜய் அவர்கள் தன்னை நேரில் வந்து சந்தித்து தன் மகளிடமும் பேசியிருக்கிறார்.

அப்போது நடிகர் விஜய் அவர்கள் நான் 96 படத்தை பார்த்தேன் உங்களை விட  உங்கள் மகள் நடிப்பு சூப்பராக இருந்தது என்று கூறியுள்ளார். அப்போது பிகில் படத்தில் ஃபுட்பால் டீமில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஆனால் நியத்தி அவர்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்வு நேரம் என்பதால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாக கூறியுள்ளார்.

இந்த நிலை தேவதர்ஷியின் மகளான நீயாத்தி தற்போது ஹீரோயின்களுக்கு நிகராக போட்டோ ஷூட் செய்து புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ இந்த புகைப்படம்.

niyathi
niyathi
niyathi