தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணா திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடியது அதை தொடர்ந்து தனது 169 திரைப்படத்தில் ரஜினி நடிக்க உள்ளார்.
இந்தப் படத்தை இளம் இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளார் இவர் இதற்கு முன்பாக கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய மூன்று படங்களை இயக்கிய பெற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது இதனால் ரஜினியும், நெல்சன்னும் இணையும் படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து கன்னட டாப் ஹீரோ சிவராஜ்குமார் நடிப்பதாக கூறப்படுகிறது. அதுவும் இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம் பிரியங்கா அருள் மோகன், ஐஸ்வர்யாராய், ரம்யா கிருஷ்ணன் போன்றவர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைவார்கள் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
இந்த படத்தின் ஷூட்டிங் வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட இருக்கிறது அதற்கான வேலைகளில் ரஜினியும் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரும் பார்த்து வருக்கின்றனர். தலைவர் 169 படத்திற்கு ஜெயிலர் என பெயர் வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் தலைவர் 169 வது படத்திற்காக பழைய கார் ஒன்றை பயன்படுத்த இருப்பதாக தகவல்கள் கூறப்படுகிறது மேலும் அந்தக் கார் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால் செய்தியை பரவி வருகிறது.