“வில்அம்பு” பட நடிகையா இது.? கல்யாணத்துக்கு பிறகு இப்படி மாறிட்டாங்க.. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய புகைப்படம்.

vilambu
vilambu

சினிமா உலகில் ஹீரோயின் என்ற அந்தஸ்தை பிடித்த நடிகைகள் பலரும் தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றிய முன்னணி நடிகையாக ஆசைப்படுவார்கள். வாய்ப்பை இழந்து விடக்கூடாது என்பதற்காக பல நடிகைகள் திருமணம் செய்து கொண்டாலும் தொடர்ந்து நடித்து வருகின்றனர் அந்த வகையில் தமிழ் சினிமாவில் நயன்தாரா சமந்தா த்ரிஷா போன்றவர்கள் பல வருடங்களாக..

சினிமா உலகில் ஹீரோயின்களாக நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை இழக்காமல் வலம் வருகின்றனர். ஆனால் இப்பொழுது இருக்கும் நடிகைகளோ ஓரிரு திரைப்படங்களில் நடித்து விட்டு திடீரென திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு டாட்டா காட்டி விடுகிறார்கள். அந்த வகையில் தமிழில் ஓரிரு திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்  சம்ஸ்க்ருத்தி ஷெனாய்.

இவர் மலையாள நடிகை ஆவார் முதலில் தன்னை நடன கலைஞராக அறிமுகப்படுத்திக்கொண்டு பின் மாடலிங் துறையில் வலம் வந்தார் ஒருகட்டத்தில் விளம்பர படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருந்த இவர் மலையாள படம் ஒன்றில் நடித்து அறிமுகமானார். அதன்பின் இவரது திறமையின் மீது நம்பிக்கை வைத்து பல்வேறு மொழிகளில் வாய்ப்புகள் கிடைத்தது.

அந்த வகையில் தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்தார். தமிழில் முதலில் சம்ஸ்க்ருத்தி ஷெனாய் காடு என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதனை தொடர்ந்து வில்அம்பு திரை படத்தில் நடித்து தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார் அந்த அளவிற்கு இந்த படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார்.

இப்படி சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டுவிட்டு பெற்றோர்களின் சம்மதத்துடன் கேரளா தொழிலதிபர்  விஷ்ணு எஸ் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஏழு வயதில் ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இப்போது ஆளே மாறி போய் குண்டாக இருக்கிறார் இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..

Samskruthy Shenoy
Samskruthy Shenoy
Samskruthy Shenoy
Samskruthy Shenoy
Samskruthy Shenoy
Samskruthy Shenoy