“மாநாடு” திரைப்படத்தின் உண்மையான பட்ஜெட் இதுவா.? சைலண்டாக வேலைபார்த்த நடிகர் சிம்பு.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி பின் தற்போது டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி தோல்வி திரைப்படங்களை கொடுத்திருந்தாலும் அவர்கள் ரசிகர்கள் ஒருபோதும் இவரை கைவிடுவதில்லை. அந்த வகையில் தொடர்ந்து பல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

தற்போது சிம்பு வெந்து தணிந்தது காடு, கொரோனா குமாரு, பத்துல தல போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் படத்திலிருந்து டீஸர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் போன்றவை வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் செம வைரல் ஆகியது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வெளி வந்த திரைப்படம் மாநாடு. இந்த படம் ஒரு டைம் லூப்பை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தது.

இந்த படத்தில் சிம்பு தனது உடல் எடையை ஃபிட்டாக வைத்துக் கொண்டு நடித்து அசத்தியிருப்பார் அதனால் ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்து இழுத்துள்ளார் படத்தில் சிம்புவின் நடிப்பு. மேலும் படம் எதிர்பாராத அளவு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று 100 கோடி வசூலை அள்ளியது என கூறி வந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் திருப்பூர் சுப்பிரமணியன் மாநாடு படத்தின் வசூல் குறித்து பேசியுள்ளார். மாநாடு படத்தின் சக்சஸ் மீட்டிங் போது மாநாடு திரைப்படம் 100 கோடி வசூலித்தது என அறிவித்தால் தான் இந்த நிகழ்ச்சி நான் கலந்து கொள்வேன் என்று சிம்பு சொன்னதாக திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

பின்பு திருப்பூர் சுப்பிரமணியன் தயாரிப்பாளரிடம் மாநாடு வசூல் எவ்வளவு என்று கேட்டுள்ளார் அதற்கு 70 கோடி தான் வசூலித்துள்ளது என்றவுடன் திருப்பூர் சுப்பிரமணியன் அப்புறம் எதற்கு பொய் சொல்ல வேண்டும் சிம்பு வரவில்லை என்றால் என்ன என்றாராம். பின்பு சிம்பு இல்லாமலே இந்த நிகழ்ச்சி நடந்ததாக குறிப்பிட்டுள்ளார்

Leave a Comment

Exit mobile version