பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சித்ரா கதாபத்திரத்தை தட்டி தூக்கியது இந்த நடிகையா.?

vj cithra
vj cithra

விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வந்த சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர் இந்த சீரியலில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக் என்பவரும் முல்லை என்ற கதாபாத்திரத்தில் விஜே சித்ரா நடித்து வந்தார்

மேலும் கடந்த வாரம் விஜே சித்ரா பைவ் ஸ்டார் ஓட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட செய்தியை கேட்ட பல பிரபலங்கள் அவரது மரணம் ஆழ்ந்த வருத்தத்தில் அவர்களை ஆழ்த்தியது அவருடன் இருந்த வீடியோ புகைப்படம் போன்றதை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு தனது வருத்தத்தை வெளிப்படுத்தி வந்தனர் பாண்டியன் ஸ்டோர் பிரபலங்கள்.

இந்நிலையில்  சித்ராவின் மரணத்தால் இனிமேல் நாங்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலை பார்க்க மாட்டோம் என்று பல மக்கள் கூறிவந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இனிமேல் முல்லை கதாபாத்திரத்தில் சித்ராவுக்கு பதிலாக அறிவுமணி (காவியா) நடித்து வருகிறாராம்.

இவர் இதற்கு முன்பு இதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் அமைதி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் அவர் முல்லை கதாப்பாத்திரத்திற்கு சரியாக நடிப்பார் என்று இவரை வைத்து தற்பொழுது பாண்டியன் ஸ்டோர் இயக்கி வருகிறார்களாம்.

bharathi kannamma
bharathi kannamma