தமிழ் சினிமாவில் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் தான் களவாணி இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விமல் மற்றும் நாயகியாக ஓவியா நடித்திருப்பார். மேலும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இத்திரைப்படத்தில் நடிகர் விமலுக்கு தங்கையாக நடித்தவர் தான் மனிஷா பிரியதர்ஷினி இவர் இந்த திரைப்படத்தின் மூலம் பிரபலமானது மட்டுமில்லாமல் இவர் பல்வேறு சீரியல்களிலும் நடித்துள்ளார் அந்த வகையில் நாணயம், சவாலே சமாளி, நிம்மதி ஆகியவையாகும்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை தன்னுடைய நான்காம் வகுப்பு படிக்கும் பொழுது தமிழில் அதிக அளவு ஆர்வம் இருந்ததன் காரணமாக தேசிய அளவில் அதிக மதிப்பெண் பெற்று கோல்ட் மெடல் வாங்கி உள்ளார் அதேபோல கல்லூரியிலும் 95 சதவீத மதிப்பெண் பெற்று கோல்ட் மெடல் வாங்கி உள்ளார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகைக்கு தளபதி விஜயுடன் ஒரே ஒரு திரைப்படத்தில் ஆவது நடித்துவிட வேண்டும் என்பதுதான் ஆசையாம். அந்த வகையில் சினிமா மீது அதிக ஆர்வம் கொண்ட நமது நடிகைக்கு ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க கூட வாய்ப்பு கிடைத்துள்ளது.
இவ்வாறு அந்த திரைப்படத்தை பாலுமகேந்திரா அவர்கள் தான் இயக்க இருந்தார் ஆனால் அவர் மறைந்த அதன் காரணமாக இவர் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு தவறிப் போய் விட்டது பின்னர் சற்குணம் துணை இயக்குனர் கபே என்ற திரைப்படத்தில் இவரை கதாநாயகியாக நடிக்க வைத்தார்.
ஆனால் அதன்பிறகு 6 வருடங்களாகியும் இவரைப் பற்றி எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இவ்வாறு பிரபலமான நமது நடிகை தற்போது என்ன செய்கிறார் என்றும் தேவை இல்லை ஆனால் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.