தனுஷ் மற்றும் நயன்தாராவின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் யாரடி நீ மோகினி இந்த திரைப்படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் சரண்யா மோகன்.
இவர் இந்த திரைப்படத்திற்கு முன்பே தமிழ் திரைஉலகில் காதலுக்கு மரியாதை இல்லை என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நச்சத்திரமாக காலடி எடுத்து வைத்தார் அதன் பின்பு தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக சில வருடங்கள் நடித்து வந்தார்.
அதற்கு பின்பு தான் யாரடி நீ மோகினி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக விளங்கினார்.
அதுமட்டுமல்லாமல் விஜய் நடிப்பில் வெளிவந்த வேலாயுதம் என்ற திரைப்படத்தில் விஜய்க்கு தங்கச்சியாக நடித்திருப்பார் அப்பொழுது இவர் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக விளங்கியது மட்டும்மல்லாமல் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கினார்.
இவறது திருமண வாழ்க்கையில் 2015 ஆம் ஆண்டு அரவிந்த் கிருஷ்ணன் என்பவரை மணம் முடித்துக் கொண்டார் தற்போது இவர்களுக்கு ஆனந்தபத்பநாபன் என ஒரு ஆண் குழந்தையும் மற்றும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
மேலும் இவரது குடும்ப புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தில் இவரது மகனை தனது முதுகில் சாய வைத்திருக்கிறார் அப்போது எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.