தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் உலக சினிமாவிலேயே துணை நடிகையாக நடித்து வரும் நடிகைகள் ஒரு சில காலக்கட்டத்தில் காணாமல் போய்விடுகிறார்கள் அந்தவகையில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் ஜீவா இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் ஸ்ரீதிவ்யா நடித்திருந்ததால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
பொதுவாக ஒரு படத்தை பார்த்தால் அனைத்து நடிகர்களையும் மனதில் வைத்துக் கொள்வது மிகவும் கடினம் தான். அந்த வகையில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகிய ஜீவா திரைப்படத்தில் விஷ்ணு விஷால் உடன் இணைந்து ஸ்ரீதிவ்யா, சூரி என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தில் ஸ்ரீதிவ்யாவின் தங்கையாக நடித்தவர் மோனிகா.
இந்த திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே மோனிகா நடித்து இருந்தார் இவர் சென்னையை சேர்ந்தவர். 1994 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் சினிமா மீது உள்ள அதிக ஆர்வத்தால் பட வாய்ப்பை தேடி அலைந்தார். அப்பொழுதுதான் விஷ்ணு விஷாலின் ஜீவா திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து பகடையாட்டம், ஜீனியஸ், ஏஞ்சலினா என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
ஜீவா திரைப்படத்தில் இவர் மிகவும் சின்ன பெண்ணாக தான் நடித்து இருந்தார் ஆனால் தற்பொழுது மடமடவென வளர்ந்து ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாடர்ன் உடையில் மஜாவாக போஸ் கொடுத்துள்ளார். சமூக வலைதளத்தில் நடிகைகள் பலரும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது இவரும் சில புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது இதோ அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்.