படையப்பா திரைப்படத்தில் ரஜினியின் இரண்டாவது மகளாக நடித்த நடிகையா இது..? இப்போ எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா..?

padayappa-1
padayappa-1

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் தான் படையப்பா இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் ரசிகர்கள் இன்றும் இத்திரைப்படத்தை பார்த்து ரசித்து வருகிறார்கள்.

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு இரண்டு மகள்கள் இருப்பார்கள் அதில் ஒருவர் நடிகர் விஜயகுமாரின் மகள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இன்னொருவர் தான் அனிதா வெங்கட் இவர் சிறந்த பாடகியும் கூட.

இவர் தமிழ் சினிமாவில் காஞ்சனா-2 வெற்றிவேல் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

மேலும் இவர் கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான ஆஹா என்ற திரைப்படத்தில் கூட ஹீரோவின் தங்கையாக நடித்து இருப்பார் என்ற திரைப்படத்தில் இவர் கால் ஊனமுற்ற பெண்ணாக நடித்து இருந்தது மட்டுமில்லாமல் இதற்கு முன்பாக அவர் இசை நிகழ்ச்சிகளில் கேமராமேன் ஆகவும் பணியாற்றியுள்ளார்.

பொதுவாக எல்லோருடைய தந்தையை போல தான் இவருடைய தந்தையும் சினிமா எல்லாம் வேண்டாம் என்று இவரை கண்டித்துள்ளார். ஆனால் ஆகா திரைப்படத்தில் ஒரு அக்மார்க் ஐயங்கார் பெண் தேவை என்று கேட்டதன் காரணமாக தன்னுடைய மகளை நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

anitha vengat-1
anitha vengat-1

அதன் பிறகு படப்பிடிப்பு தளத்தில் விஜயகுமார் நான் ரஜினியைப் பார்க்கப் போகிறேன் நீயும் வரியா என அவரிடம் கேட்டாராம் சரி வருகிறேன் என்று சென்ற பொழுது ரஜினி பார்த்தவுடன் நீ என்னுடைய திரைப்படத்தில் எனக்கு மகளாக நடிக்கிறாயா என்று கேட்டுள்ளார் அதற்கு சரி என்று சொன்னேன் அதன் பிறகுதான் படையப்பா திரைப்படத்தில் நான் அவருக்கு மகளாக நடித்தேன் என்று கூறியுள்ளார்.