பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் வானிலை செய்தி வாசிப்பாளராக தனது குரலை ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம் செய்தவர்தான் செய்தி வாசிப்பாளர் மோனிகா. இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி தன்னுடைய சிறந்த திறமையின் மூலமாக அதன் பிறகு சினிமா சீரியல் என பிசியாக நடிக்க ஆரம்பித்து விட்டார்.
அந்தவகையில் இவர் சமூக வலைதள பக்கத்தில் சமூக ரீதியான பிரச்சனைகள் மற்றும் அரசியல் ரீதியான பல்வேறு விஷயங்கள் என அனைத்தையும் தைரியமாக பேசி வீடியோக்கள் வெளியிட்டு வந்ததை தொடர்ந்து இவருடைய செய்திவாசிப்பாளர் வேலைக்கு பல்வேறு பிரச்சனைகளும் உருவானது.
ஆனால் நமது மோனிகா செய்திவாசிப்பாளர் வேலையே வேண்டாம் என உதறித் தள்ளிவிட்டு வலைதள பக்கத்திலும் கொஞ்சம் தள்ளியே இருந்து வந்தார். அதனுடன் யூடியூப் சேனலில் மட்டும் சமூக ரீதியான பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
அந்த வகையில் சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்திற்காக கூட சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார் இதனால் அவர் வெளியிட்ட வீடியோவில் மூலமாக அவருக்கு ஏகப்பட்ட மிரட்டல்கள் வந்தது மட்டுமில்லாமல் கெட்ட பெயரையும் சம்பாதித்து விட்டார்.
பொதுவாக நமது மோனிகா விற்கு செய்தி வாசிப்பாளராக ஆக வேண்டும் என்ற ஆசை அதிகம் ஆனால் அவருக்கு கிடைத்ததோ இரண்டு நிமிடம் வானிலை செய்தி அறிக்கை வெளியிடும் வாய்ப்பு தான். இந்நிலையில் நமது தொகுப்பாளினி சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியில் தன்னுடைய மகனுடன் கலந்து கொண்டார் அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.